இந்தியாவுடன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அதிக ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொட எதிர்பார்ப்பு

இந்தியாவுடன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அதிக ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மொரகொட எதிர்பார்ப்பு

 

இன்று (12) புதுடெல்லியில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய சிந்தியாவைச் சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுடனான சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை மேலும்  வலுப்படுத்துவதற்கான வழிகளை எதிர்பார்த்தார்.

உயர்ஸ்தானிகர் மொரகொடவை அமைச்சர் சிந்தியா அன்புடன் வரவேற்றார். கொழும்பில் இருந்து ஆரம்பமான விமானத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கைத் தூதுக்குழுவினருக்கு வழங்கிய விருந்தோம்பல்  மற்றும் சிறந்த ஏற்பாடுகளுக்காக உயர்ஸ்தானிகர் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இந்த சைகைக்காக இலங்கைக்கு நன்றிகளைத் தெரிவித்த அமைச்சர் சிந்தியா, இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதன் மூலம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.

கோவிட்டுக்குப் முந்தைய கால அட்டவணையின்படி இரு நாடுகளுக்கும் இடையிலான விமானச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கோருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த உயர்ஸ்தானிகர், அதிகரித்த விமான சேவைகளின் மூலம், குறிப்பாக குறைந்த செலவு விமானச் சேவைகளின் மூலம் அதிகமான இணைப்புக்களை மேற்கொள்வதற்கான உதவியை நாடினார்.  இலங்கைக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20-25மூ இந்திய சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்பைக் கொண்டிருப்பதாகவும், இதுவரையில் சுற்றுலாவின் மிகப்பெரிய ஆதாரமாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்படவுள்ள களனி ரஜமஹா விகாரையின் இரண்டு சுவரோவியங்களின் புகைப்படங்களை இலங்கை சமர்ப்பித்ததை நினைவுகூர்ந்த உயர்ஸ்தானிகர் மொரகொட, நிரந்தரமாக காட்டப்படுத்துவதற்காக புத்தகயா மற்றும்  வாரணாசி போன்ற பௌத்த சுற்றுவட்டத்தில் உள்ள ஏனைய இரண்டு சர்வதேச விமான நிலையங்களுக்கும் இதே போன்ற புகைப்படங்களை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்கு அமைச்சர் சிந்தியா உறுதியுடன் பதிலளித்தார்.

2002இல் தனது பொதுச் சேவை வாழ்க்கையைத் தொடங்கிய அமைச்சர் சிந்தியா, இதற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறை இணை  அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், மின்துறை அமைச்சராகவும் (சுயாதீனப் பொறுப்பு) பணியாற்றியுள்ளார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது டில்லி

2021 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close