28 நவம்பர் 2020 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற கடல்சார் கூட்டுறவு குறித்த 4ஆவது தேசிய பாதுகாப்பு மட்டத்திலான முத்தரப்புக் கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் வழங்கப்பட்ட குறிப்புரை

28 நவம்பர் 2020 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற கடல்சார் கூட்டுறவு குறித்த 4ஆவது தேசிய பாதுகாப்பு மட்டத்திலான முத்தரப்புக் கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் வழங்கப்பட்ட குறிப்புரை

 

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர், கௌரவ மரியா தீதீ அவர்களே
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் அவர்களே
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களே
வெளிநாட்டுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களே
மரியாதைக்குரிய பிரதிநிதிகளே
கனவான்களே கனவாட்டிகளே

ஆறு வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறும் இந்த முக்கியமான முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து வருகை தந்திருக்கும் பிரதிநிதிகள் மற்றும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் எனது மகிழ்ச்சியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நான் எங்கள் மத்தியில் அண்மையில் பார்வையாளராக இணைந்துள்ள பங்களாதேஷையும், 2014 முதல் எங்களுடன் பார்வையாளர்களாக இருந்த மொரீஷியஸ் மற்றும் சேஷெல்ஸையும் வரவேற்கிறேன்.

கொவிட்-19 நோய்ப்பரவலால் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியிலும் கொழும்பிற்கு நீங்கள் வருகை தந்துள்ளமையானது, தனித்தனியாகவும் ஒன்றுசேர்ந்தும் எங்கள் முக்கிய கடல்சார் பாதுகாப்பு நலன்கள் குறித்தும் இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் நல்வாழ்வுக்கான நீங்கள் வெளிப்படுத்தும் உங்களது மேலான அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டுகிறது. எமது தேசிய முன்னுரிமைகளைக் கருத்தில்கொண்டு நாம் எமது கூட்டுப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதிப்படுத்துவதற்காக ஒருங்கிணையவேண்டும். கடலால் சூழப்பட்ட நாடுகளான எமது செழிப்புக்கு இந்துசமுத்திரம் ஒரு முக்கிய வழியாகவுள்ளது. சிலர் கூறியதைப்போல, இது 21 ஆம் நூற்றாண்டில் எமது பூமியின் தலைவிதியை நன்கு வரையறுக்கக்கூடும். இந்தக் குறிக்கோள்களைத் தொடர்வதற்கானதொரு பெறுமதியான தளமாக இந்த கருத்தரங்கம் அமையும்.

எமது பாதுகாப்பானது, பௌதிக பாதுகாப்பு மற்றும் அதன் விளைவான பிராந்திய ஸ்திரத்தன்மையுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, ஆனால், ஆனால் கடல்சார் சூழலுக்கான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான பாதுகாப்பு சவால்களையும் உள்ளடக்கியதாகும். கடல்சார் வாழ்க்கை மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டல், மாசுபாடு, எண்ணெய்க் கசிவுகள் மற்றும் இரசாயனங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், கல்கள் அமிலமயமாக்குதல் மற்றும் கடல் மட்டம் உயர்தல் போன்றவையும் எமது கரிசனங்களில் அடங்கும்.

உலகின் நான்காவது பெரிய இந்துசமுத்திரம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 60 வீதத்தைக் கொண்டிருக்கிறது. உலகின் 80 வீதமான கப்பல்கள் இதனூடாகப் போக்குவரத்தை மேற்கொள்கின்றன மற்றும் உலகின் வர்த்தகத்தின் 46 வீதத்திற்கு உதவுகின்றது. 55 வீதமான உலகின் சரக்குக் கப்பல்கள் இந்துசமுத்திரத்தினூடாகப் போக்குவரத்தை மேற்கொள்கின்றன. இந்துசமுத்திரத்தின் முக்கிய கேந்திரங்களிலுள்ள நாடுகள் என்ற வகையில், இந்துசமுத்திரத்தில் அதிகரித்துவரும் சர்வதேச கடல் வழிகளுக்கு மத்தியில், கடல்சார் பாதுகாப்பானது எமது அதிமுக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.

உங்கள் அனைவருக்கும் போலவே, இலங்கையும் இந்துசமுத்திரம் கொண்டுள்ள வாய்ப்புக்களை அவதானிக்கிறது. இந்த வாய்ப்புக்கள் எமது மக்களுக்கும் இப்பிராந்தியத்திற்கும் ஏன் இந்த பாரிய உலகத்திற்குமே பொறுப்புக்களைக் கொண்டுவருகின்றது.  எமது செயலீடுபாட்டின் அத்திவாரம், எமது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்தலாகும். எமது கடலில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் தொடர்பாடலின் கடல் எல்லைகள் மற்றும் கடலடிக்கேபிள்களைப் பாதுகாத்தக் ஆகியவற்றைப் பேணுவதன் முக்கியவத்துவத்தை நாங்கள் கருத்தில்கொண்டுள்ளோம். சகல நாடுகளும் கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தினைப் பின்பற்றவேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்பாக, கௌதம புத்தர் பரி நிர்வாணமடைந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ‘தபசு’ மற்றும் ‘பலூக்கா’ ஆகிய இருவர், புத்தரின் முதல் இரண்டு தொண்டர்கள் ஆகினர். வெற்றிகரமான வியாபாரிகளான அவர்கள் இந்துசமுத்திரத்தில் பிரயாணம் செய்திருந்தனர். உண்மையைச் சொல்லப்போனால், அவர்களுக்கு புத்தர் தனது முடிகளைப் பரிசாகக்கொடுத்திருந்தார். அவர்கள் திருகோணமலை வடகிழக்குத் துறைமுகத்தில் வந்திறங்கி அந்த புனித எச்சங்களைக் கொண்டு ‘கிரிஹந்துசெய’ வைக் கட்டினர். இது இன்று பௌத்தர்களால் வணங்கப்படுகிறது. அந்த இரண்டு வியாபாரிகளும் பின்னர் வங்காள விரிகுடா ஊடாக சிட்டகொங் மற்றும் மியன்மாருக்குச் சென்றனர்.

அத்தகைய வரலாற்றுச் சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ்ந்தமையானது, நெருங்கிய ஒத்துழைப்பு மூலம் இந்துசமுத்திரத்தில் எமது பரஸ்பர பாதுகாப்பினை பாதுகாக்காமல் வெல்லமுடியாதவை என எவரும் கூறமுடியாது என்ற உண்மையை நிலைநாட்டுகிறது.

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், 16 நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் எமது பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பிய அதிகார சக்திகள், பிரதானமாக,  இந்து சமுத்திரம் மற்றும் அரேபிய கடல் ஊடான அவர்களின் அதியுயர்ந்த கடல்சார் செய்தகுதிகள் காரணமாகவே கிழக்கினை வெற்றி கொண்டனர்.

மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்கான எனது நாட்டின் கவனமானது மிகவும் நீண்டகாலமானதாகும். அது தவிர, 1982ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு வெற்றிகரமாக தலைமை தாங்குவதில் நாங்கள் முக்கிய பங்கு வகித்தோம். இலங்கை போன்ற அணிசேரா இயக்க நாடுகளுடன் இணைந்து 'இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக' நிறுவுவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை 26வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இலங்கை 1971 இல் நிறைவேற்றியது.

500 ஆண்டுகளுக்கு முன்னர், 1470களில், 'சீத்தாவாக்க' அரசர்களான 'மாயதுன்ன' மற்றும் 'ராஜசிங்க' ஆகியோர் கள்ளிக்கோட்டையின் ஸமோரியனுடன் இணைந்து, சமுத்திரத்தில் போர்த்துக்கேயரின் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக கூட்டாகப் போராடியமை வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. படையெடுப்பிற்கு எதிரான எமது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டான கடற்படை முயற்சியின் மிகவும் தெளிவான பதிவு இதுவாகும்.

ஒரே மதிப்புக்கள் மற்றும் ஒத்த ஆளுகை மாதிரிகளைப் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயக நாடுகளாக, சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் இறையாண்மையின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச ஒழுங்கை மதிக்கும் வலுவான மரபுகள் எம்மிடம் உள்ளன.

மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,

குறிப்பாக புதிய 'பச்சை-நீல' பொருளாதாரக் கொள்கைகளில், எமது கடல் பொருளாதாரம் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சமுத்திர நீரில் பயன்படுத்தப்படாத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியானது அத்தகையதொரு பகுதியாகும். மழைக்காலத்தின் இரண்டு பருவங்கள் நிச்சயமாக ஒரு மகத்தான ஆற்றலை உறுதிப்படுத்துகின்றன. எமது பிராந்திய வளர்ச்சிக்கும், காலநிலை நட்பு சார்ந்த முறையிலும் இந்த சுற்றுச்சூழல் நட்பு முறைமைகளை பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

எம் வசமுள்ள வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் திறன்களுடன், எமது பிராந்தியத்திலுள்ள பெரிய பங்காளிகள் இயற்கை மற்றும் கடல் அவசரநிலைகளின் போது விரைவான பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கான சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இலங்கையின் ஆட்புல நீருக்குள் எம்.வி. நியூ டயமண்ட் எண்ணெய்த் தாங்கிக் கப்பலானது செப்டம்பர் மாதம் தீ விபத்துக்கு உள்ளானபோது, சரியான மற்றும் மகத்தான நடவடிக்கைகளை முன்னெடுத்த இந்திய மற்றும் இலங்கைக் கடற்படை மற்றும் கடலோர காவற்படைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

எமது கூட்டு நடவடிக்கைகள் தோல்வியுற்றிருந்தால், எமது கடல் வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பாரியதொரு பேரழிவு ஏற்பட்டிருக்கும். மொரிஷியக் கடல் எம்.வி. வகாஷியோ விபத்துச் சம்பவமானது, கடல்சார் பாதுகாப்புத் தயார்நிலைக்குத் தேவையான ஆரம்ப சைகைகயை எழுப்பியது.

எமது பாதுகாப்பு உபகரணங்கள் மிகவும் தொழில்முறையானவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையுமாகும் எனினும், குறிப்பாக கட்டுப்பாடற்ற பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற சுதந்திரமான செயற்பாடுகளிலான சட்டவிரோத நடவடிக்கைகளை இந்து சமுத்திரத்தில் முற்றிலுமாக தடுப்பதானது எமது கடற்படைக்கு மிகவும் சவாலானதாக உள்ளது.

எமது கடற்படைக்கும் கடலோர காவற்படைக்கும் இடையிலான இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வு ஆகியன இந்த உரையாடலின் மூலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,

எமது பிராந்தியத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எதிர்கால சாத்தியமானது முற்றிலும் நம்பிக்கைக்குரியதாகும். முன்னும் பின்னுமாக அதிக அளவிலான தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுவதனால், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய வெற்றி ஒரு நல்ல குறிகாட்டியாகும். ஒவ்வொரு பிட் தரவுகளும் கீழ்மட்ட நீரின் பௌதிக கோடுகள் மற்றும் எமது சமுத்திரத்திற்கு மேலேயுள்ள காற்றின் வழியாக பயணிக்கின்றன. பொருளாதார ரீதியில், இன்றைய கப்பல் பாதைகளுக்கு ஒத்த அதிக வருமானத்தைக்  கொண்டுள்ள புதியதொரு பொருளாதாரத்தை இதனால் எளிதில் உருவாக்க முடியும்.

2011 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற முதலாவது சந்திப்புடன், இந்த முயற்சிக்கு தலைமை தாங்கிய இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய மூன்று முக்கிய நாடுகளின் தொலைநோக்கு மிகுந்த தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு நாம் எமது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இணை நிறுவனர் என்ற வகையில், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்த உரையாடலின் கீழ் நாம் தொடர்கின்ற குறிக்கோள்களுக்கு இன்று வரை தனது ஆழ்ந்த அர்ப்பணிப்புக்களைக் கொண்டுள்ளார்.

இன்றைய சந்திப்பானது, துரதிஷ்டவசமாக சில காலங்களாக செயலற்ற நிலையில் இருந்த மன்றத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரு ஐக்கிய முயற்சியின் விளைவாகும். எமது வளங்களின் முழுமையான நன்மையை நிலையான பாதுகாப்பான முறையில் அறுவடை செய்வதற்கான ஈடுபாடு மற்றும் இணைந்த பணியாற்றுகை ஆகியன எமது கூட்டான பொறுப்பாக இருக்கும்.

இத்தகைய உயர்ந்த அளவிலான கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து பயனடையும் தருணத்தில், இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பானது எமது நாடுகள் அபிவிருத்தியடைவதற்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த மன்றத்தில் நீங்கள் ஒன்றாக எடுக்கும் கூட்டு நடவடிக்கையால் எமது பொதுவான வெற்றி வடிவமைக்கப்பட்டு வரையறுக்கப்படும் என்பதை அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நினைவூட்டுவதற்காக இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கின்றேன்.

மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,

கனவான்களே கனவாட்டிகளே

இந்த முக்கியமான கடல்சார் பாதுகாப்பு மன்றத்தில் வெற்றிகரமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெறுவதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, எனது கருத்துக்களை நிறைவு செய்கின்றேன்.

அனைவருக்கும் நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close