2022 ஜூன் 20ஆந் திகதி அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ கிளேர் ஓ நீல் (பா.உ) மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் (பா.உ) ஆகியோரின் கூட்டு ஊடக அறிக்கை

2022 ஜூன் 20ஆந் திகதி அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ கிளேர் ஓ நீல் (பா.உ) மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் (பா.உ) ஆகியோரின் கூட்டு ஊடக அறிக்கை

2022 ஜூன் 19 - 21 வரை கொழும்புக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ கிளேர் ஓ நீல் (பா.உ) அவர்களுடன் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு நிறைவின் போது இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கு அவுஸ்திரேலியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக கௌரவ ஓ நீல் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

வர்த்தகம், முதலீடு மற்றும் கல்வி வாய்ப்புக்கள், நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் மக்களிடையே வலுவான இணைப்புக்களை உருவாக்குதல் போன்ற பகிரப்பட்ட நலன்களை அடைவதற்கான ஒத்துழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வலுவான இருதரப்பு உறவை இரு அமைச்சர்களும் இதன்போது சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக ஒழுங்கற்ற இடம்பெயர்வுத் துறையில் தங்கத் தரத்திலான ஒத்துழைப்பு உள்ளடங்கலாக, அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளிலோ அல்லது நடைமுறை இறையாண்மை எல்லைகளிலோ எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஓ நீல் குறிப்பிட்டார். ஆட்கடத்தல்காரர்களை முறியடிப்பதற்கும், அப்பாவி மக்களின் உயிரிழப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கான உறுதியை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல் உட்பட அனைத்து வகையான நாடுகடந்த குற்றங்களையும் தடுப்பதிலும், எல்லை நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர். இந்த எதிர் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு அவர்கள் உறுதியளித்தனர். அவுஸ்திரேலிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆட்கடத்தலை தடுப்பது குறித்த வட்டமேசைக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் அதிகாரிகள் தற்போதைய நிலைமையின் மேலோட்டத்தை வழங்கியதுடன், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புக்களை ஆராய்ந்தனர்.

ஆட்கடத்தல் மற்றும் ஏனைய நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான அவுஸ்திரேலியா - இலங்கை கூட்டுச் செயற்குழுவின் கீழ் நடைபெற்று வரும் ஒத்துழைப்பில் திருப்தியடைவதாக இரண்டு அமைச்சர்களும் தெரிவித்ததுடன், நிபந்தனைகள் அனுமதிக்கப்படும் போது, இலங்கையில் கூட்டுச் செயற்குழுவின் 8வது சுற்றை கூடிய விரைவில் நடாத்துவதற்கு ஒப்புக்கொண்டனர்.

நடைமுறை இறையாண்மை எல்லைகள் எனப்படும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் புலனாய்வுப் பகிர்வு, தடுப்பு, இடையூறு, இடைமறிப்பு மற்றும் திரும்புதல் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு ஒத்துழைப்பையும் இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர், தற்போதைய பொருளாதார சவால்களை முறியடிக்கும் முயற்சிகளில் அவுஸ்திரேலியாவின் வலுவான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்தச் சூழலில் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close