புதிய வடிவமைப்புத் தோற்ற அம்சங்களுக்கு மேலதிகமாக, இலங்கை அரசாங்கத்தின் வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகள் தொடர்பான தகவல்களை பயனர் நட்பு ரீதியாக அணுகிக் கொள்வதற்கு அனுமதிக்கும் வகையில், தனது புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இன்று (27/07) அறிமுகப்படுத்தியது. தோற்ற அம்சங்களானது, ஃபிளிப் பொக்ஸ்களின் பாவனை, வெவ்வேறு கருப்பொருட்களையுடைய வலைப்பக்கங்கள் மற்றும் இலங்கையிலுள்ள ஏனைய முக்கிய நிறுவனங்களுக்கான விரைவான இணைப்புக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வலைத்தளத்தின் இணைய முகவரியானது, முந்தைய www.mfa.gov.lk. எனும் அதே தளத்தில் உள்ளது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
27 ஜூலை 2020