வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனையில் 2022ஆம் ஆண்டிற்கான பணிகள் ஆரம்பம்

வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனையில் 2022ஆம் ஆண்டிற்கான பணிகள் ஆரம்பம்

வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனையில் 2022ஆம் ஆண்டிற்கான பணிகள் தூதரக வளாகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவுடன் ஆரம்பமாகின.

இலங்கையின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக உயிர் நீத்த போர்வீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒஸ்ட்ரியாவிலுள்ள தம்ம-ஸென்ட்ரம் நயனபொனிகவின் ஸ்தாபகரும் பிரதம மதகுருவுமான வணக்கத்திற்குரிய கலாநிதி விஜயராஜபுர சீலவன்ச தேரரினால் சமய அனுஷ்டானங்களும் அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்கான ஹீல் தானயவும் இடம்பெற்றன. வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் இலங்கை மக்களுக்கும் தூதரக ஊழியர்களுக்கும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர்.

அரச ஊழியர்களாக உறுதிமொழி எடுத்துக்கொண்டதன் மூலம் நாட்டுக்கு திறமையாகவும் நேர்மையாகவும் சேவையாற்றுவதற்கான தமது அர்ப்பணிப்பை தூதரக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

வியன்னா

2022 ஜனவரி 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close