பர்சா வணிக சமூகம் இலங்கைத் தயாரிப்புக்களை ஆராய்வதற்கு தயாராக உள்ளது

பர்சா வணிக சமூகம் இலங்கைத் தயாரிப்புக்களை ஆராய்வதற்கு தயாராக உள்ளது

பர்சா வர்த்தக மற்றும் தொழில்துறை உறுப்பினர்களுடனான வட்ட மேசை தகவல் பகிர்வு சந்திப்பின் போது, பர்சா சார்ந்த வணிக சமூகத்தை தரமான இலங்கையர்களின் தயாரிப்புக்களை ஆராய்ந்து இலங்கையில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புக்ளைத் தேடுவதற்கு தூதுவர் எம்.ஆர். ஹசன் அழைப்பு விடுத்தார். 2021 செப்டம்பர் 24ஆந் திகதி பர்சா மற்றும் இலங்கைக்கு இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, பர்சா வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் பணிப்பாளர் சபையின் பதில் தலைவர் திரு. இஸ்மாயில் குஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர்களுடன் தூதுவர் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடாத்தினார்.

இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன்,இலங்கையின் சுவையூட்டிகள், இலங்கைத் தேயிலை மற்றும் திடமான டயர்கள் மற்றும் ஏனைய ரப்பர் தொடர்பான பொருட்கள் மீது அவர்கள் ஆர்வம் காட்டினர். தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இல்லாமல் வெளிநாட்டினருக்காக இலங்கை முழுமையாக திறக்கப்பட்டவுடன் அவர்கள் இலங்கைக்குச் விஜயம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்.

பர்சா பிராந்தியம் துருக்கியின் இரண்டாவது பெரிய வணிக நகரமாவதுடன், இது மிகப்பெரிய உற்பத்தித் துறையைக் கொண்டுள்ள அNது வேளை, 2020ஆம் ஆண்டில் 21.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மொத்த வர்த்தகத்தைப் பதிவு செய்தது. மக்கள் தொகை அடிப்படையில் பர்சா தற்போது 3.1 மில்லியன் மக்கள்தொகையுடன் நான்காவது இடத்தில் உள்ளது. பர்சா வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் 46,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், அது 1889 இல் நிறுவப்பட்டது. ஆடை, வாகன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், புதிய பழங்கள், விதைகள் மற்றும் உலர் பழங்கள் மற்றும் சுற்றுலா ஆகியவை அதன் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.

தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் திருமதி. யோஷிதா ஜயசூரியா, பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ  துணைத் தூதுவர் திரு. அஹ்மத் யில்டிஸ், சட்டமன்றத்தின் உப தலைவர் திரு. முரத் பயிசித், சட்டமன்றத்தின் துணைத் தலைவர் திரு. மெட்டின் சென்யுர்ட், பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினர் திரு. யுக்செல் தாஸ்டெமிர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2021 செப்டம்பர் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close