ரஷ்யத் தூதுவருடனான சந்திப்பின்போது ரஷ்யாவுடனான இலங்கையின் பரந்த ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைப்பு

ரஷ்யத் தூதுவருடனான சந்திப்பின்போது ரஷ்யாவுடனான இலங்கையின் பரந்த ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களை இலங்கையில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி பி. மடேரி ஆகஸ்ட் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இலங்கையின் நீண்டகால நட்பு மற்றும் ரஷ்யாவுடனான பரந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தியதுடன், பல்தரப்புக் கோட்பாடுகளில் கொள்கை மற்றும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கு ரஷ்யா அளித்த ஆதரவுகளுக்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சரின் உணர்வுகளை ஏற்றுக் கொண்ட தூதுவர் மேட்டரி, வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக பீரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அதே வேளை, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, ஆற்றல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் ரஷ்யாவின் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு, வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் 2022ஆம் ஆண்டு இலங்கை - ரஷ்யா இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவை நினைவுகூருதல் ஆகிய இரு வெளிநாட்டு அமைச்சுகளுக்கிடையில் வரவிருக்கும் அரசியல் ஆலோசனைகளைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கியிருந்தது.

கோவிட்-19 தொற்றுநோயால் இன்று மனிதகுலம் எதிர்கொள்ளுகின்ற பொதுவான சவால்களுக்கு பகிரப்பட்ட தீர்வுகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 23

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close