முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பு

முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜப்பானியப் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக 2022 செப்டம்பர் 27 - 28 திகதிகளில் ஜப்பானுக்கு விஜயம் செய்தார். மறைந்த பிரதமருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் மறைந்த பிரதமர் அபேயின் துணைவியார் அகி அபே அம்மையார் ஆகியோருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். பிரதமர் கிஷ்டா, தலைமை அமைச்சரவை செயலாளர் மாட்சுனோ, வெளியுறவு அமைச்சர் ஹயாஷி மற்றும் அபே அம்மையார் ஆகியோர் மறைந்த பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பல உலகத் தலைவர்களை வாழ்த்தினர்.

அவர் ஜப்பானில் தங்கியிருந்த காலத்தில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பேரரசர் நருஹிரோ அரச விருந்திற்காக வரவேற்கப்பட்டதுடன், 2023 பெப்ரவரி 04ஆந் திகதி நினைவுகூரப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அவர் பேரரசர் நருஹிட்டோவிற்கு அழைப்பு விடுத்தார்.

செப்டெம்பர் 28ஆந் திகதி, பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி, ஜப்பான்-இலங்கை உறவுகளை மையமாகக் கொண்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இந்த ஆண்டு இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு நிறைவின் மைல்கல் மற்றும் முன்னோக்கச்p செல்லும் வழிமுறைகள் குறித்தும் இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர்.

தான் பிரதமராக இருந்த காலத்தில் மறைந்த பிரதமர் அபே கொண்டிருந்த நட்பு மற்றும் நல்லெண்ணத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, தான் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையின் அபிவிருத்திப் பாதையில் ஆக்கபூர்வமான பங்காளியாக ஜப்பான் ஆற்றிய பங்கைப் பாராட்டினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயன்முறைகள் குறித்து ஜப்பான் பிரதமர் கிஷிடாவிடம் விளக்கிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, இலங்கையை அபிவிருத்திக்கான பாதையில் மீண்டும் கொண்டு வருவதற்கு உதவுவதற்காக ஜப்பானிய நல்லெண்ணத்தையும் ஆதரவையும் நாடினார்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி 2022 செப்டம்பர் 27ஆந் திகதி ஜனாதிபதி விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜப்பானில் தங்கியிருந்த போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கையும் சந்தித்தார்.

ஜப்பான் இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் கூட்டமைப்பு நடாத்திய காலை உணவுக் கூட்டத்திலும் கலந்து கொண்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். முன்னாள் ஜப்பானிய பிரதமரும், ஜப்பான் இலங்கை சங்கத்தின் கௌரவத் தலைவருமான யசுவோ ஃபுகுடா, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் ஆளுநர் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் இலங்கையில் ஆர்வமுள்ள வர்த்தக நிறுவனங்களின் சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்பவர்களையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க சந்தித்தார்.

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம்,

டோக்கியோ

2022 செப்டம்பர் 29

Please follow and like us:

Close