மத்திய தரைக்கடல் பிராந்தியம், இஸ்பார்டா மாகாணம், பர்தூர் மற்றும் அன்டலியாவுக்கான விஜயம்

மத்திய தரைக்கடல் பிராந்தியம், இஸ்பார்டா மாகாணம், பர்தூர் மற்றும் அன்டலியாவுக்கான விஜயம்

தூதரக உறவுகளை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் / துறைகளை ஆராய்வதற்கும், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் அங்காராவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.ஆர். ஹசன் துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தியத்திற்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தின் போது தூதுவர் இஸ்பார்டா, பர்துர் மற்றும் அன்டலியா மாகாணங்களின் ஆளுநர்கள், அண்டலியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முக்கிய வர்த்தக பிரமுகர்கள் மற்றும் அக்டெனிஸ் பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஆகியோரை சந்தித்தார்.

தமது மாகாணங்கள் இலங்கையுடன் இணைக்க ஆர்வமாக இருப்பதாகவும், மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்துவதாகவும் இஸ்பார்டா மாகாண ஆளுநர் கௌரவ. ஓமர் சீமெனோக்லு, பர்தூர் மாகாணத்தின் ஆளுநர் கௌரவ. அலி அர்ஸ்லாண்டாஸ் மற்றும் அன்டலியா மாகாணத்தின் ஆளுநர் கௌரவ. எர்சின் யாசிசி ஆகியோர் சுட்டிக்காட்டினர். குறிப்பாக விவசாயம் மற்றும் சுரங்கத் துறைகளில் சுற்றுலா மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தொடர்புகளை ஏற்படுத்துவதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். சுற்றுச்சூழல் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் நிலையான சுற்றுலா தொடர்பான திட்டங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைவதற்கான ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் உள்ள வர்த்தக சபைகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கிடையில் ஒரு மெய்நிகர் சந்திப்பு அமர்வை ஏற்பாடு செய்வதில் அன்டலியா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கான விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கு அன்டலியா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் திரு. டவுட் செடின் மற்றும் உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர். அன்டலியா மாகாணம் சுற்றுலாவில் குறிப்பாக சுற்றுச்சூழல் சுற்றுலா, விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வளத் துறை சார்ந்து உள்ளது. தூதுவர் இலங்கையின் முதலீட்டுச் சூழல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் என விளக்கமளித்தார்.

எதிர்கால அபிவிருத்தி, பயனர்கள், தொழில் முனைவோர் மற்றும் பயன்பாடுகள் மூலம் பயனடையும் பௌதீக உட்கட்டமைப்பு மற்றும் வளங்கள் கொண்ட வணிகக் கண்டுபிடிப்புத் தளமான இனோவட்சோவிற்கு அன்டலியா வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் திரு. டவுட் செடினுடன் இணைந்து தூதுவர் விஜயம் செய்தார்.

அக்டெனிஸ் பல்கலைக்கழகத்தின் தாளாளர் பேராசிரியர் கலாநிதி. ஓஸ்லெனென் ஓஸ்கானையும் தூதுவர் சந்தித்தார். அக்டெனிஸ் பல்கலைக்கழகம் 69,030 மாணவர்கள் மற்றும் 4,303 கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்களைக் கொண்ட அன்டலியா மாகாணத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும். அக்டெனிஸ் பல்கலைக்கழகம் 24 பீடங்கள், 7 நிறுவனங்கள், 1 பாடசாலை, 1 கன்சர்வேட்டரி,  12 தொழிற்கல்விப் பாடசாலைகள் மற்றும் 57 ஆராய்ச்சி மற்றும் விண்ணப்ப மையங்களில் கல்வித் துறைகளில் செயற்பாடுகளைத் தொடர்கின்றது. கல்விப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களின் அடிப்படையில் அக்டெனிஸ் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து தூதுவரும் தாளாளரும் கலந்துரையாடினர்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2021 நவம்பர் 15

Please follow and like us:

Close