புதிய உணவு மற்றும் விவசாய அமைப்பின் நாட்டிற்கான பிரதிநிதி வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

புதிய உணவு மற்றும் விவசாய அமைப்பின் நாட்டிற்கான பிரதிநிதி வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் நாட்டுக்கான பிரதிநிதி விம்லேந்திர ஷரன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை 2021 ஜூன் 28ஆந் திகதியாகிய இன்றைய தினம்  வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இலங்கைக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி ஷரனை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, இலங்கைக்கு தொடர்ந்தும் நல்கிய ஆதரவுகளுக்காக உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.  விவசாயம், மீன்வளம், கால்நடைகள் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி, வனவியல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான பல்வேறு திட்டங்களின் மூலம் உணவு மற்றும் விவசாய அமைப்பு இலங்கைக்கு நல்கிய மதிப்புமிக்க பங்களிப்பை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.

இயற்கை உரங்கள் குறித்த இலங்கையின் கொள்கையை விரிவாக விளக்கிய அமைச்சர் குணவர்தன, நெகிழக்கூடிய மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதற்கானதொரு விரைவான திட்டத்தை வகுப்பதற்காக  உணவு மற்றும் விவசாய அமைப்பிலிருந்து தொழில்நுட்ப உதவியை நாடினார்.

இலங்கையில் உணவு மற்றும் விவசாய அமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து அதனுடனான இலங்கையின் பலன்தரும்  உறவுகளை உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி நினைவு கூர்ந்தார். நாட்டில் நிலையான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் பொதுவான நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு மிகவும் ஆர்வமாக இருப்பதாக  அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்துக்கும், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பு அடுத்த  ஆண்டுகளில் புதிய உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியின் கீழ் மேலும் பலப்படுத்தப்படும் என அமைச்சர் குணவர்தன நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூன் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close