பிலிப்பைன்ஸின் வெளிவிவகார செயலாளரை (அமைச்சர்) தூதுவர் ஷோபினி குணசேகர  மரியாதை நிமித்தம் சந்திப்பு

பிலிப்பைன்ஸின் வெளிவிவகார செயலாளரை (அமைச்சர்) தூதுவர் ஷோபினி குணசேகர  மரியாதை நிமித்தம் சந்திப்பு

 

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, பிலிப்பைன்ஸின் வெளிவிவகார செயலாளர் (அமைச்சர்) என்ரிக் ஏ. மனலோவை செயலாளர் அலுவலகத்தில் வைத்து மரியாதை  நிமித்தமாக சந்தித்தார்.

தூதுவர் குணசேகர, செயலாளர் மனலோவின் அண்மைய நியமனத்திற்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரின் பாராட்டுக் கடிதத்தையும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை அறிக்கையையும் கையளித்தார். இலங்கையின் தற்போதைய nஅரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு வர்த்தகம், 2022 செப்டம்பரில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் 55வது வருடாந்த கூட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மணிலாவிற்கு பணிபுரியும் விஜயம் மற்றும் 2022 ஒக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெற்ற இலங்கை கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான P627 இன் நல்லெண்ண விஜயம் ஆகியன குறித்தும் அவர் விளக்கினார். பிலிப்பைன்ஸில் தூதரகத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள வாய்ப்புகள், எம்.எஸ்.எம்.ஈ. மற்றும் திறன் அபிவிருத்தித் துறைகளுக்கான மின் வணிகம் மற்றும் இலங்கை பணியாளர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மேலும், பாலினம், சுற்றுலா சேவைகள் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம், அரிசி அடிப்படையிலான தொழில்நுட்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் பலாயில் இலங்கை பங்குதாரர்களுக்கு மெய்நிகர் தளத்தில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் அபிவிருத்திப் பயிற்சி நிகழ்ச்சிகளில் பிலிப்பைன்ஸின் வெளியுறவுத் துறை - தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபையின் ஈடுபாடுகளுக்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இலங்கையுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்கான பிலிப்பைன்ஸின் முழுமையான இருதரப்பு ஆதரவை வெளிவிவகார செயலாளர் மனலோ தெரிவித்தார். 3வது சுற்று அரசியல் ஆலோசனைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ ஏற்பாடு செய்யப்படலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

2004 இல் தூதுவர் டெலியா டொமிங்கோ-அல்பர்ட்டிற்குப் பிறகு பிலிப்பைன்ஸின் வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட்ட  இரண்டாவது தொழில் இராஜதந்திரி மனலோ ஆவார். அவர் 2016 மற்றும் 2018 இல் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் 1வது மற்றும் 2வது சுற்று அரசியல் ஆலோசனைகளை நடாத்தினார்.

இலங்கைத் தூதரகம்,

மனிலா

 

2022 அக்டோபர் 18

 

Please follow and like us:

Close