பிம்ஸ்டெக்கின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தின் 17வது அமர்வுக்கான தலைவராக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டார்

பிம்ஸ்டெக்கின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தின் 17வது அமர்வுக்கான தலைவராக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டார்

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தின் 17வது அமர்வுக்கான தலைவராக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏப்ரல் 01ஆந் திகதி கொழும்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் குணவர்தன, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சாசனம் விரைவாக இறுதி செய்யப்படல் வேண்டும் எனத் தெரிவித்தார். சாசனத்தை நிறைவு செய்ததன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகக் கொள்கைகளுக்கு உறுதியளிப்பதற்கும், பாராளுமன்ற நடைமுறை குறித்த கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களுக்கு அதிகமான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தின் போது, பிம்ஸ்டெக்கின் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் இலங்கையுடன் மெய்நிகர் ரீதியாக இணைந்திருந்தன.

ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரித்த பிம்ஸ்டெக் போக்குவரத்து இணைப்புக்கான பாரிய திட்டத்தை விரைவாக செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். பிம்ஸ்டெக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், கோவிட்-19 தொற்றுநோயின் போது போக்குவரத்து இணைப்புக்கள், கடலோர வழிசெலுத்தல், நீர்வழிகள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் தடைகள் குறித்து மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என்றும், அதற்கேற்ப எதிர்காலத்தில் விமானச் சரக்கு வழங்கல், மக்கள் தொடர்புகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த திட்டங்கள் தயாரிக்கப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் மட்டக் கூட்டத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தலைமை தாங்கினார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 ஏப்ரல் 02

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close