இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையேயான முதலீட்டு வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும், தாய்லாந்தின் முன்னணி வரிசை முகவர்கள் மற்றும் வர்த்தக சம்மேளனங்களை வாய்ப்புக்களைக் கண்டறியும் சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் இலங்கை முதலீட்டு சபை மற்றும் சீனா துறைமுக பொறியியல் நிறுவனம் போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை தூதரகம் உயர் அதிகார மட்டப் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைத்தது.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்ந்து அடையாளம் காண்பதற்காக, இந்த முற்போக்கான பேச்சுவார்த்தைகளில் தாய்-இலங்கை வர்த்தக சபை, தாய்லாந்து முதலீட்டு சபை, தாய் வர்த்தக சபை மற்றும் தாய்லாந்து வணிக சபை, தாய் தொழில்கள் கூட்டமைப்பு, தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சின் தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்கள் திணைக்களம், தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பல சிரேஷ்ட நிலை முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
தாய்லாந்தில் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கை நிறுவனங்களுக்கு உதவக்கூடிய விருப்பங்களுக்கு மேலதிகமாக, சீனா துறைமுக பொறியியல் நிறுவனமான போர்ட் சிட்டி மற்றும் உற்பத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, விவசாய மற்றும் உணவு பதப்படுத்தல், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய சேவைகள் மற்றும் இதர ஆறு துறைகளின் மூலம் இலங்கையால் வழங்கப்படக்கூடிய பல முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களின் போது ஆராயப்பட்டன.
உயர் அதிகார மட்ட மன்றத்தைத் திறந்து வைத்து, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளினதும் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்ற தாய்லாந்து இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் நிரந்தரப் பிரதிநிதி, சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, 'இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை மற்றும் இருபது வெளியுறவுக் கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ், நிலையான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக, உயர் மட்ட வணிகத்துடன் கூடிய முதலீட்டு நட்பு நாடாக இலங்கை மாறுவதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டார்.
தாய்லாந்து முதலீட்டாளர்கள் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மற்றும்இலங்கையில் உள்ள ஏனைய முதலீட்டுத்த் திட்டங்களில் முதலீடு செய்வதற்காக, பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவுக்கு அண்மையில் தான் விடுத்த மரியாதை நிமித்தமான அழைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவு கூர்ந்த தூதுவர், தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சின் தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டார்ம் பூந்தாமுக்கு விஷேட நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் கட்டாய முதலீட்டு சூழல் மற்றும் இலங்கையின் தனித்துவமான முதலீட்டு மையங்களை விவரிக்கும் போது, 'இந்தக் கலந்துரையாடல்கள் முதலீட்டு வாய்ப்புகளின் பரந்த திறனை எமக்கு வெளிப்படுத்தியுள்ளதுடன், அவை உருமாறும் மாற்றத்திற்கான கதவுகளைத் திறந்து எமது இரு பொருளாதாரங்களினதும் எதிர்காலத்தை சாதகமாகப் பாதிக்கும். மாற்றமுறும் மற்றும் பல்தரப்பட்ட வாய்ப்புக்களை இலங்கை வழங்குவதுடன், சீனாவின் துறைமுகப் பொறியியல் நிறுவனமான போர்ட் சிட்டி மூலம் இலங்கையில் பிராந்திய தலைமையகங்களை நிறுவ உலகளாவிய நிறுவனங்களுக்கு உதவும் இந்தத் திறனைப் பயன்படுத்துவதற்கும் மற்றும் அதன் முக்கிய உந்துதல் துறைகள், சந்தை அணுகல், புவியியல் இருப்பிடம், பொருளாதார அடிப்படைகள், வெற்றி மற்றும் திறமை மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற மூலோபாய முதலீட்டு முன்மொழிவுகளின் தொகுப்பை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் தாய்லாந்தின் முதலீட்டு சமூகத்தை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்' என முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொத்தல குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகர விற்பனை மற்றும் முதலீட்டாளர் உறவுகளின் முகாமையாளர் ராதிகா எல்லேபொல திட்டத்தை விவரித்தார். திட்டத்தின் முன்னேற்றம், அதிநவீன உட்கட்டமைப்பு, நிலைத்தன்மை, பல சேவைகளில் விஷேட பொருளாதார வலயத்தில் முதலீடு செய்வதற்கானஇணையற்ற வாய்ப்புக்கள் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் மேலும் விரிவாக விவரித்தார். குடியிருப்பு, வணிகம், விருந்தோம்பல் மற்றும் கலப்புப் பயன்பாட்டு முன்னேற்றங்கள் ஆகிய நான்கு முக்கிய சொத்து வகுப்புக்களில் நிலவும் வாய்ப்புக்கள் குறித்து அவர் தாய் வணிக சபை மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொழும்பு துறைமுக நகரமானது புவியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க இடத்தைக் கொண்டு ஒரு தனித்துவமான நன்மையை வழங்குகிறது என்றும் அது சேவைகளுக்கான பிராந்தியத்தின் மையமாக செயற்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாய் தொழிற்துறைக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, தாய்லாந்து முதலீட்டு சபையின் தாய் நிறுவன அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர்; புன்லோப் புண்யசிறி, தாய்லாந்து வணிக சபையின் தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா விவகாரங்களுக்கான குழுவின் துணைத் தலைவர் சோங்சங் படவனிச் மற்றும் ஆடைத் தொழில் சங்கத்தின் தலைவர் சோம்சக் ஸ்ரீசுபோர்வானிச் ஆகியோரும் இந்த மன்றத்தில் உரையாற்றினர்.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை
பேங்கொக்
2021 செப்டம்பர் 28