24 செப்டம்பர் 2021 அன்று நியூசிலாந்தின் போல்மெர்ஸ்டன் வடக்கு நகர நூலகத்தின் சமுதாய மொழிகள் பிரிவிற்கு சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலுள்ள புத்தகங்களின் தொகுப்பு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த புத்தகங்கள் சினாக் இலங்கை அறக்கட்டளையின் ஸ்தாபகரான திரு. திஷான் சம்பத் திசாநாயக்க அவர்களால் , பால்மர்ஸ்டன் வடக்கு மேயர் திரு கிராண்ட் ஸ்மித், நூலக முகாமையாளரான லிண்டா மூர் மற்றும் நூலக ஊழியர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக நூலகத்திற்கு கையளிக்கப்பட்டன.
நியூசிலாந்திலுள்ள போல்மெர்ஸ்டன் வடக்கு நகர நூலகமானது, தனது பன்மொழி வாசகர்களுக்காக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலுள்ள புத்தகங்களின் தொகுப்பைப் பேணிவைத்துள்ளது. மார்ட்டின் விக்கிரமசிங்க , டபிள்யு.ஏ.அபேசிங்க போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் உட்பட சிங்களம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட 76 நூல்களைக்கொண்ட இந்த நன்கொடையானது, இலங்கை இலக்கியத்துடன் நூலகத்தை வளப்படுத்தும்.
இத்தொகுப்பில் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கம்பெரலியா, கலியுக, யுகந்தய மடோல் தூவ, அபே கம ஆகிய தொகுப்புகள் உள்ளடங்கலாக டாக்டர் டபிள்யூ.ஏ. அபேசிங்கவின் பிரபல்யமான மொழிபெயர்ப்புகளான சுவாமி சாஹா யாலுவோ, யுத்தயா ஹா பிரேமயா மற்றும் குழந்தைகளுக்கான சிங்கள மொழி புத்தகங்கள் மற்றும் பெளத்த ஜாதகக்கதைகள் ஆகியவை அடங்கும்.
பால்மர்ஸ்டனில் வசிக்கும் இலங்கைக் குழந்தைகள் தமது தாய் மொழி பற்றிய அறிவை விரிவுபடுத்தவும் இலங்கை வாழ்க்கை பற்றிய கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த புத்தகத் தொகுப்புகள் பெரிதும் பயனளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிதியம் மற்றும் சமுத்ரா புத்தக வெளியீட்டாளர்கள் இந்த புத்தகங்களுக்கு அணுசரனை வழங்கியிருந்தனர். இது கன்பெராவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் வசதி செய்யப்பட்டது.
இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
கன்பரா
16 அக்டோபர் 2021