இந்திய வெளிவிவகார மற்றும் கலாசார இராஜாங்க அமைச்சர் ஸ்ரீமதி மீனகாஷி லேகியை ஞாயிற்றுக்கிழமை (19) சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் தனித்துவமான பாத்திரங்களை ஆற்றிய இரண்டு வரலாற்று நபர்களான தேரி சங்கமித்தா மற்றும் ராமாயண சீதை ஆகியோரின் சின்னங்களை மேம்படுத்துவதன் மூலம் இரு அண்டை நாடுகளுக்கிடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
தேரி சங்கமித்தா மற்றும் ராமாயண சீதை ஆகியோர் இந்திய - இலங்கை உறவுகளுக்கு மகத்தான பங்களிப்பை ஆற்றிய இரண்டு அதிவிஷேடமான நபர்களாவர் எனக் குறிப்பிட்ட இரு தரப்பினரும், அவர்கள் இருவரையும் சுற்றியதாக சுழலும் நவீன இருதரப்பு கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்வதற்கு ஒப்புக்கொண்டனர்.
இலங்கை மற்றும் புது தில்லி தேசிய அருங்காட்சியகம் மற்றும் நவீன கலைக்கான தேசிய காட்சியகம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் மீனகாஷி லேகிக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட அழைப்பு விடுத்தார்.
அனகாரிக தர்மபால அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட 'புத்த காயாவில் உள்ள மகாபோதி விகாரையின் வரலாறு' என்ற சிறு புத்தகத்தின் ஹிந்திப் பதிப்பின் பிரதியுடன், 'இந்தியாவிலுள்ள இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களுக்கான இலங்கையின் ஒருங்கிணைந்த மூலோபாயம் 2021/2023' என்ற தனது கொள்கை ஆவணத்தின் பிரதியை இந்திய இராஜாங்க அமைச்சருடன் உயர்ஸ்தானிகர் மொரகொட பகிர்ந்து கொண்டார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புது தில்லி
2021 டிசம்பர் 22