தூதுவர் சுமித் தசநாயக்க பிரேசில் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

தூதுவர் சுமித் தசநாயக்க பிரேசில் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

பிரேசில் கூட்டாட்சிக் குடியரசிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க,  பிரேசிலியாவில் உள்ள பலாசியோ டோ பிளானால்டோவில் (பிளானால்டோ அரண்மனை) ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிடம் தனது நற்சான்றிதழ்களை 2021 அக்டோபர் 20ஆந் திகதி, வெள்ளிக்கிழமை கையளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை அரசாங்கத்திடமிருந்தான ஜனாதிபதி  போல்சனாரோவுக்கான அன்பான வாழ்த்துக்களை தூதுவர் தசநாயக்க தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல் இலங்கை மற்றும் பிரேசிலுக்கு இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதனை மையமாகக் கொண்டதாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் தூதுவர் எடுத்துரைத்தார். வெளிநாட்டு  முதலீடுகளுக்கான இலங்கையில் உள்ள வாய்ப்புக்களை அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

பிரேசிலில் புதிய தூதுவரின் வெற்றிகரமான பதவிக்காலத்துக்காக ஜனாதிபதி போல்சனாரோ  இலங்கைத் தூதுவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிரேசிலிய வெளிநாட்டு அமைச்சர் கார்லோஸ் அல்பர்டோ பிரான்சியா, வெளியுறவு பொதுச்  செயலாளர் பெர்னாண்டோ சிமாஸ் மாகல்ஹீஸ் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தூதுவர் தசநாயக்க அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, கயானா, பராகுவே, பெரு, சுரினாம் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.

1998இல் இலங்கை வெளியுறவுச் சேவையில் இணைந்த இராஜதந்திரியான தூதுவர் சுமித் தசநாயக்க, எத்தியோப்பியாவுக்கான இலங்கையின் முதலாவது தூதுவராகவும் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். கனடா, நோர்வே மற்றும் இந்தியாவில் உள்ள  இலங்கைத் தூதரகங்களில் ஏனைய இராஜதந்திரப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

தற்போதைய அவரது பிரேசிலிக்கான நியமனத்திற்கு முன்னர், அவர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் மனிதவள மற்றும் தூதரக முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாகப்  பணியாற்றினார்.

தூதுவர் சுமித் தசநாயக்க இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணி  (ஹொனர்ஸ்) பட்டம் பெற்றவராவார்.

இலங்கைத் தூதரகம்,

பிரேசில்.

2021 அக்டோபர் 12

 ....................................................

මාධ්‍ය නිවේදනය

බ්‍රසීලයේ නව ශ්‍රී ලංකා තානාපති සුමිත් දසනායක මහතා අක්තපත්‍ර භාරදේ

බ්‍රසීලයේ නව ශ්‍රී ලංකා තානාපති සුමිත් දසනායක මහතා බ්‍රසීල ජනාධිපති ජයර් බොල්සනාරෝ මහතා වෙත 2021 ඔක්තෝබර් 08 වන සිකුරාදා වන දින බ්‍රසීල ජනාධිපති මන්දිරයේදී අක්තපත්‍ර භාරදෙන ලදී.

අක්තපත්‍ර භාරදීමෙන් අනතුරුව බ්‍රසීල ජනාධිපතිවරයා සමග සිදුකළ විශේෂ සාකච්ඡාවේදී ශ්‍රී ලංකා තානාපතිවරයා විසින් ශ්‍රී ලංකා ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා සහ ශ්‍රී ලංකා රජයේ සුභාශිංෂණ බ්‍රසීල ජනාධිපතිවරයා වෙත ප්‍රදානය කරන ලදී. බ්‍රසීලයේ සාර්ථක ධුර කාලයක් සඳහා නව ශ්‍රී ලංකා තානාපතිවරයාට ජනාධිපති බොල්සොනාරෝ සිය සුභ පැතුම් එක් කළේය.

මෙහිදී, දෙරට අතර ද්විපාර්ශවික සබඳතා තවදුරටත් වර්ධනය කරගැනීමේ අවශ්‍යතාවය තානාපති සුමිත් දසනායක මහතා විසින් බ්‍රසීල ජනාධිපතිවරයා වෙත අවධාරණය කරන ලද අතර, ශ්‍රී ලංකාව තුළ වෙළඳ, සංචාරක සහ ආයෝජන යන ක්ෂේත්‍රයන්හි පවතින පුළුල් අවස්ථා පිළිබඳව ද බ්‍රසීල ජනාධිපතිවරයා දැනුවත් කරන ලදී.

මෙම සාකච්ඡාවට බ්‍රසීලයේ විදේශ කටයුතු අමාත්‍ය කාලෝස් ඇල්බර්ටෝ ෆ්‍රැන්කා මහතා සහ විදේශ ලේකම් ෆර්නැන්ඩෝ සිමාස් මගල්යේස් මහතා ඇතුළු බ්‍රසීලයේ විදේශ කටයුතු අමාත්‍යංශයේ සහ ජනාධිපති කාර්යාලයේ ඉහළ පෙළේ නිලධාරීන් පිරිසක් එක් වී සිටියහ.

තානාපති සුමිත් දසනායක මහතා බ්‍රසීලයේ තානාපති ධුරයට සමගාමීව ආර්ජන්ටිනාව, චිලී රාජ්‍යය, කොළොම්බියාව, ගයනාව, පැරගුවේ රාජ්‍යය, උරුගුවේ රාජ්‍යය, පේරු රාජ්‍යය සහ සුරිනාමය යන රටවලද අනේවාසික තානාපති ලෙස කටයුතු කරනු ලබයි.

කැළණිය විශ්ව විද්‍යාලයෙන් විද්‍යාවේදී ගෞරව උපාධිය හිමිකරගෙන ඇති සුමිත් දසනායක මහතා 1998 වර්ෂයේදී ශ්‍රී ලංකා විදේශ සේවයට එක් වූ අතර, ඉතියෝපියාවේ පළමු ශ්‍රී ලංකා නේවාසික තානාපතිවරයා සහ අප්‍රිකානු සංගමයේ ශ්‍රී ලංකාවේ නිත්‍ය නියෝජිතයා වශයෙන් ද කටයුතු කර ඇත.

සුමිත් දසනායක මහතා සිය සේවා කාලය තුළදී විදේශ කටයුතු අමාත්‍යංශයේ මෙන්ම කැනඩාව, නෝර්වේ සහ ඉන්දියාව යන රටවල පිහිටි ශ්‍රී ලංකා දූත මණ්ඩල වෙත සිය සේවය ලබාදී ඇති අතර, බ්‍රසීලයේ ශ්‍රී ලංකා තානාපතිවරයා වශයෙන් පත්වීම් ලැබීමට ප්‍රථමයෙන් විදේශ කටයුතු අමාත්‍යංශයේ මානව සම්පත් සහ තානාපති කාර්යාල කළමනාකරණය පිළිබඳ අධ්‍යක්ෂ ජනරාල්වරයා වශයෙන් සේවය කර ඇත‍.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

බ්‍රසීලය

2021 ඔක්තෝම්බර් 12වැනි දින

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close