மொங்கோலியாவுக்கான தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதுவர் கலாநிதி. பாலித கோஹோனா, 2022 ஏப்ரல் 27ஆந் திகதி மொங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னாவிடம் தனது நற்சான்றிதழ் கடிதத்தை கையளித்தார். நற்சான்றிதழ் வழங்கும் விழா அரச இல்லத்தில் நடைபெற்றதுடன், தூதுவர் கலாநிதி பாலித கொஹொனா அரச மரியாதை அணிவகுப்பை அங்கு பார்வையிட்ட அதே வேளையில், ஜனாதிபதி குரேல்சுக் உக்னாவுடன் சந்திப்பொன்றிலும் ஈடுபட்டார். இந்த சந்திப்பில், தூதுவர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்பான வாழ்த்துக்களை மங்கோலிய ஜனாதிபதிக்குத் தெரிவித்ததுடன், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு முன்மொழிந்தார்.
தூதுவர் கொஹொன, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பிரதி அமைச்சர் மற்றும் பணிப்பாளர் ஆகியோரையும் சந்தித்து, அப்பா ஹம்பா லாமா (உலான் படாரில் உள்ள ஆலயத்தின் பிரதித் தலைவர்) மற்றும் வர்த்தக சபையின் தலைவர் ஆகியோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
தென்கிழக்கு ஆசியாவிற்கு அடிக்கடி பயணம் செய்யும் மொங்கோலிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதன் அவசியம் குறித்தும், நடுத்தர வர்க்கத்தினரிடையே நாகரீகமான பானமாக தேநீர் மாறி வருவதால் நாட்டிற்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தூதுவர் கலந்துரையாடினார். உலான் பாடரில் சிலோன் டீயை (நைரா) விற்பனை செய்யும் இலங்கைத் தேயிலை வினியோகஸ்தரையும் தூதுவர் சந்தித்தார்.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்
2022 மே 04