டச்சுச் தூதுவருடனான சந்திப்பின் போது நெதர்லாந்துடனான இலங்கையின் நீண்டகால உறவுகளை  வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைப்பு

 டச்சுச் தூதுவருடனான சந்திப்பின் போது நெதர்லாந்துடனான இலங்கையின் நீண்டகால உறவுகளை  வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைப்பு

இலங்கையில் உள்ள நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை ஆகஸ்ட் 25, புதன்கிழமை கொழும்பிலுள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.  இந்த சந்திப்பின் தொடக்கத்தில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸுக்கு தூதுவர் கோங்க்ரிஜ்ப் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சட்ட அமைப்பு, கட்டிடக்கலை, உணவு, கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் இலங்கையின் சமூக அரசியல் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான நீண்ட மற்றும் பயனுள்ள உறவு தாக்கம் செலுத்தியுள்ளதாக இந்தக் கலந்துரையாடலின் போது வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். இது சம்பந்தமாக அமைச்சர் இலங்கைச் சட்ட அமைப்பின் பரிணாம வளர்ச்சிக்குப் பங்களித்த ரோமன் டச்சு சட்டத்தின்  பாரம்பரியத்தைக் குறிப்பிட்டார்.

சமகால உறவுகள் தொடர்பாக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் நெதர்லாந்துடனான  ஒத்துழைப்புப் பகுதிகளை வலுப்படுத்துவதற்கும், இணைப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் பலதரப்புக் கூட்டங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குமான இலங்கை அரசாங்கத்தின் வலுவான தீர்மானத்தை வெளிநாட்டு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அமைச்சரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், தூதுவர் கோங்க்ரிஜ்ப் பரஸ்பர நலனுக்காகப் பயன்படுத்தப்பட்ட இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையே உள்ள பல ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு  குறித்து விரிவாக விவரித்தார். இது சம்பந்தமாக, இலங்கையுடன் இணைந்து செயற்படும் திட்டங்களில் பயன்படுத்தப்படும் விவசாயம், பால் தொழில், கலாச்சாரம், பாரம்பரிய முகாமைத்துவம் மற்றும் மறுசீரமைப்பு ஆகிய துறைகளில் டச்சுத் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை தூதுவர் குறிப்பிட்டார்.

விவசாயத் துறையில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, பால் துறையில் திறன் அபிவிருத்தி மற்றும் நெதர்லாந்துடன் மேலும் ஒத்துழைக்கக்கூடிய பகுதிகள் என இலங்கையில் இயற்கை உரங்கள் மற்றும் நிலையான  விவசாயத்திற்கான பயன்பாடு ஆகியவற்றை தூதுவர் குறிப்பிட்டார். பரஸ்பர நன்மைக்காக ஒருங்கிணைந்த பகுதிகளை மேலும் ஆராய்வதற்கு இதன்போது உடன்பாடு ஏற்பட்டது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல்  பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close