ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை இடைநிறுத்துவதனால் உழைக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தொழிற்சங்கங்கள் வெளிநாட்டு அமைச்சருக்குத் தெரிவிப்பு

ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை இடைநிறுத்துவதனால் உழைக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தொழிற்சங்கங்கள் வெளிநாட்டு அமைச்சருக்குத் தெரிவிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி இலங்கை ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை இழந்தால், அது நாட்டின் உழைக்கும் பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும் ஆதலால், அது குறித்து ஐரோப்பிய ஆணைக்குழுவில் சமர்ப்பணங்களை மேற்கொள்ளுமாறு ஐந்து முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டனர். தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வா மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் வெளிநாட்டு அமைச்சில் இன்று (02) நடைபெற்ற சந்திப்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், இலங்கை நிதஹஸ் சேவக சங்கமய, இலங்கை வணிக தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை கடற்படையினரின் தேசிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை இழப்பதால் உழைக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஜி.எஸ்.பி + வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக, இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நடவடிக்கைகள் முனனெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close