சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை

 சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை

ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்குப் பின்னர், 5வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி மற்றும் ஹொங்கியாவோ பொருளாதார மன்ற திறப்பு விழா ஆகியவற்றில் மெய்நிகர் ரீதியாக உரையாற்றிய முதல் பேச்சாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். இலங்கை ஜனாதிபதிக்கு மேலதிகமாக, தொடக்க விழாவில் மொரிட்டானியா, மொசாம்பிக், பெலாரஸ், கயானா, சாலமன் தீவுகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் தலைமைப் பணிப்பாளர், அரச தலைவர்கள் அல்லது அரசாங்கத்தின் தலைவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் உரையாற்றினர்.

துணைப் பிரதமர் ஹூ சுன்குவா தொடக்க அமர்வை நெறிப்படுத்தியதுடன், புதிய நிலைக்குழு உறுப்பினர் லி கியாங், லீ கெகியாங்கிற்குப் பின்னர் பிரதமராக அமர்வை நிறைவு செய்தார். தொடக்க விழாவில் இருவரும் பௌதீக ரீதியாக கலந்து கொண்டனர்.

சீனாவின் தொடர்ச்சியான உயர்மட்டத் திறப்பு மற்றும் பன்முகத்தன்மைக்கான உறுதியான உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஜி சுட்டிக் காட்டினார். பகிரப்பட்ட எதிர்காலம் மற்றும் மனிதகுலத்திற்கான பொதுவான செழிப்பு பற்றிய தனது பார்வையை அவர் வலியுறுத்தினார். இரட்டை புழக்கத்தில் உள்ள பொருளாதாரத்தில் உயர்தர அபிவிருத்தி சீனாவால் தொடரப்படும்.

பேச்சாளர்கள் சீனாவுக்கான ஏற்றுமதியின் அபிவிருத்தியைக் குறிப்பிட்டனர். அனைத்து நாடுகளுக்கும் பரந்த வாய்ப்புக்களை உருவாக்கி அடுத்த சில ஆண்டுகளில் சீனா பத்து டிரில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்யும். சீனா, இன்றும், உலகின் மிகப்பெரிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஏற்றுமதிக்கான இலக்காகவும், இறக்குமதியின் மிக முக்கியமான ஆதாரமாகவும், அந்நிய நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் குறிப்பிடத்தக்க ஆதாரமாகவும் சீனாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இவ்விழாவில் இலங்கையின் சார்பில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன கலந்துகொண்டார்.

இலங்கைத் தூதரகம்

பெய்ஜிங்

2022 நவம்பர் 08

Please follow and like us:

Close