'ஆரம்பகால நடவடிக்கைக்கான ஆரம்பகால எச்சரிக்கை: சிறுவர் படையினரின் ஆட்சேர்ப்பு மற்றும் பயன்பாட்டைத் தடுத்து, நிறைவு செய்வதற்வதற்காக வன்கூவர் கோட்பாடுகளை செயற்படுத்துதல்' என்ற தலைப்பிலான மெய்நிகர் நிகழ்வு
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மாண்புமிகு மொஹான் பீரிஸ் அவர்களின் அறிக்கை
2021 பெப்ரவரி 12, காலை 10:30 மணி - மதியம் 12:00 மணி
இந்த முக்கியமான நிகழ்வை ஏற்பாடு செய்த கனடா, ருவாண்டா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளின் நிரந்தரத் தூதரகங்களுக்கும், ஐ.நா. அமைதி செயற்பாட்டுத் திணைக்களம் மற்றும் சிறுவர், அமைதி மற்றும் பாதுகாப்புக்கான டல்லயர் நிறுவனத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக, சிறுவர் படையினரின் பயன்பாட்டிற்கு எதிரான சர்வதேச தினத்தை நாம் இன்று அனுஷ்டிக்கின்றோம். முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அன்னான் அவர்கள் கூறிய, 'கடந்த தசாப்தத்தின் அனுபவத்திலிருந்து நாம் பெறக்கூடிய பாடம் ஏதேனும் இருந்தால், அது சிறுவர் படையினரின் பயன்பாடானது மனிதாபிமான அக்கறையை விட அதிகம்; அதன் தாக்கம் உண்மையான சண்டை நேரத்திற்கு அப்பால் நீடிக்கும்; மற்றும் பிரச்சினையின் நோக்கம் நேரடியாக சம்பந்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்பதாகும்' என்ற வார்த்தைகளை நான் நினைவுகூர விரும்புகின்றேன். கனடாவின் பிரதம மந்திரி கௌரவ. ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின், 'சிறுவர் படையினரின் பயன்பாட்டிற்கு நம் உலகில் இடமில்லை ..... நாடுகளை ஒன்றிணைத்து, வன்கூவர் கோட்பாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம், சிறுவர்கள் சிறுவர்களாக இருப்பதை உறுதிசெய்து, அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான எதிர்காலத்தை கட்யெழுப்புதல் வேண்டும்' என்ற வகையில் இந்த சிந்தனையை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் நான் மேலும் ஊக்கப்படுத்தப்பட்டேன்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளாக நாட்டை அச்சுறுத்திய அரசு சாராத செயற்பாட்டாளர் குழுவின் கைகளிலான சிறுவர் படையினரின் சோகமான நிகழ்வை இலங்கை அனுபவித்தமையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 2009ஆம் ஆண்டில் இந்தக் குழு நடுநிலையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சிறார்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைக்கும் கணிசமான பணியை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது. முன்னாள் சிறுவர் படையினருக்காக இலங்கை நடாத்திய மறுவாழ்வுத் திட்டத்தை சித்தரிக்கும் சில புகைப்படங்களை இப்போது காண்பிக்க விரும்புவதுடன், இந்தச் சிறார்களை அங்கு நாம் எமது சொந்தக் குழந்தைகளைப் போலவே நடத்திய அதே வேளை, முறையான கல்விக்கும் மேலதிகமாக, அவர்களுக்கு சாரணர் நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஒரு ஊடக நிறுவனத்தில் சில வானொலி நிகழ்ச்சிகளிறும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
நிகழ்வுகளின் பரந்த சாளரத்தைத் திறக்கும் வன்கூவர் கோட்பாடுகளில் உள்ள கட்டளைகளையும் ஆரம்ப எச்சரிக்கை அத்தியாயங்களையும் நான் குறிப்பிட வேண்டும். இங்கே குறிப்பிடும் வகையில், நாங்கள் நிறுத்த விரும்பும் செயலில் ஈடுபட்டுள்ள இந்த அரசு சாராத செயற்பாட்டாளர்களின் சில செயல்களின் பக்கம் நாம் கண்மூடித்தனமாகத் திரும்புவதைக் கேட்க முடியாது. சிறுவர் படையினரின் பயன்பாட்டைச் சித்தரிக்கும் மற்றும் வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்தின் கருத்தை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படும் சில புகைப்படங்களை நான் சுருக்கமாகக் காண்பிக்கின்றேன். ஒரு படத்தில், ரொக்கெட் லோஞ்சர் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளின் பிரதிகளை சுமந்து செல்லும் போர் சீருடை அணிந்த சிறுவர்கள் இருப்பதைப் பார்க்கின்றீர்கள். இது ஒரு அழகான நாடகம்! இது சிண்ட்ரெல்லா அல்லது ஜெக் அன்ட் பீன் ஸ்டோல்க் அல்லது லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் அல்ல, ஆனால் வெறுப்பை ஊக்குவிககும் வகையில், பசூகாக்களின் பிரதிகளையும், அனைத்து வகையான ஆயுதங்களையும் சிறு பிள்ளைகள் சுமந்து நிற்கின்றனர். மற்றொன்றில், 8 வயதுக்குட்பட்ட பாடசாலைச் சிறார்கள் தற்கொலை வீரர்களாக உடையணிந்து ஒரு நாடகத்தை இயற்றுகின்றனர். மற்றொரு சிறிய நகைச்சுவை நடாகமென்ற வகையில், சிறுவர் வீரர்களை மகிமைப்படுத்துவதில் இன்னொன்று இதுவாகும். இந்தப் படங்கள் மிகையானவற்றைப் பேசுகின்றன.
மேன்மை தங்கியவர்களே,
அத்தகைய குழுக்களின் செயற்பாட்டை நாம் அனைவரும் அறிவோம் என்பதுடன், அது குறித்து நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், இந்தக் குழுவால் உருவாக்கப்பட்ட உண்மையான சிறுவர் வீரர்கள் இலங்கையில் பௌதீக ரீதியாக இருந்தபோது, வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோரின் பிரிவுகளால் அவர்களுக்கு உதவி, நிதியுதவி மற்றும் மகிமை ஆகியன அளிக்கப்பட்டமையை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம் என நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டவசமாக, இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வாழும் சிறுவர்கள், இந்த சிறுவர் வீரர்களை மகிமைப்படுத்தும் விழாக்களில் கலந்துகொள்வதையும், இந்த அரசு சாராத செயற்பாட்டாளர்களின் குழுவுக்கு நிதி திரட்டுவதையும் நாங்கள் கண்டிருக்கின்றோம். குறிப்பாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கு கலாச்சாரம் மற்றும் மொழி குறித்த அறிவை வழங்குவதற்காக பாடசாலைகளைப் பயன்படுத்துவதை இந்த முறைமை உள்ளடக்குகின்றது. இளைய தலைமுறையினருக்கு அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதிப்புக்களைக் கற்பிப்பதற்கான மிகச்சிறந்த மற்றும் பாராட்டத்தக்க அமைப்பின் கீழ், இதைவிட மோசமான மற்றும் பயமுறுத்தும் வகையிலான ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அது சிறு குழந்தைகளை மூளைச் சலவை செய்வதாகும் அதே வேளை, இது தேசிய இனங்களை வெறுக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகின்றது. இந்த நிறுவனங்களில் சில இந்த அரசு சாராத செயற்பாட்டாளர்களின் குழுவுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பதையும், உண்மையில் அவர்களின் முன்னணி அமைப்புக்களாக அவை இருந்ததையும், வெளிநாடுகளிலும், வருமான ஆதாரமாகவும் தமது சட்டவிரோத நடவடிக்கைகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கண்டறிந்துள்ளோம். உண்மையில், ஐரோப்பாவில் மட்டும் 350 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20,000 மாணவர்களைக் கொண்டிருந்தன.
புலம்பெயர்ந்தோரின் சில நடவடிக்கைகள் இந்தப் புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன - தமது சகோதர சகோதரிகளைக் கொல்லும் நோக்கில் சிறுவர் படையினரின் கடுமையான மற்றும் சோகமான கதையை மீண்டும் இயற்ற நிர்பந்திக்கப்படும் சிறு குழந்தைகளின் அப்பாவித் தோற்ற கச்சேரிகள் மற்றும் நாடகங்கள். என் அன்பான நண்பர்களே, சர்வதேச சமூகத்தில் இதைப் பற்றி நாங்கள் என்ன செய்கின்றோம்? பதில் மிகக் குறைவு, ஆனால் சொல்லாட்சியின் பனிச்சரிவு பயங்கரவாதத்தை மகிமைப்படுத்த செயலற்ற முறையில் அனுமதிக்கின்றது. இது தடையின்றி கவனிக்கப்படாமல் சென்று, தமிழ் இளைஞர்களின் திட்டமிட்ட தீவிரமயமாக்கலுக்கு வழிவகுத்தது. மாணவர்கள் தம்மை தியாகிகள் மற்றும் பயங்கரவாதிகளாக வெளிப்படுத்துவதற்கான முறையான உளவியல் நிலைமை இந்த அரசு சாராத செயற்பாட்டாளர்களின் குழுவினால் இஸ்லாமிய மதரஸாக்களில் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாவதுடன், இன்றும் தொடர்கின்றது. இந்தக் கொடூரமான சோதனையை எதிர்த்துப் போராடுவதற்கான எமது முயற்சிகளில், பயங்கரவாதத்திற்கான காரணத்தை மேலும் மேம்படுத்துவதற்காக பல்வேறு அரசு சாராத செயற்பாட்டாளர்களின் அதிநவீன இயந்திரமயமாக்கல்களை நாம் மறக்கவில்லை என்பது முக்கியம். இந்த விடயங்களில் முன்னோக்கிச் செல்வதற்கான எமது முயற்சிகள், ஐ.நா.வில் மனிதநேயத்தின் எமது கொள்கைகளை தமது சொந்த நோக்கங்களுக்காக வளர்ப்பதற்கும், பரப்புவதற்கும் நாம் பயன்படுத்தும் அதே நடைமுறைகளை அவர்கள் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பெரும்பாலும் சிறுவர்கள் சர்வதேச மேடைகளில் ஒரு இலக்கக் குறியீட்டுடன் நிறைவு செய்யப்படுவதுடன், சிறுவர்கள் ஏன் ஆயுதங்களை எடுத்துச் செல்கின்றார்கள், எந்த சூழ்நிலையில் அவர்கள் இயக்கங்களுக்குப் பலியாகின்றார்கள் மற்றும் அவர்களின் நிகழ்ச்சி நிரல்கள் உணரப்படுவதை உறுதிசெய்வதற்கு எதையும் செய்யும் என்பன குறைந்த அளவில் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த சிறுவர்களின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச அளவில் ஆக்கபூர்வமான எதையும் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, வன்கூவர் கோட்பாடுகள் நீண்ட கால தாமதமான ஒன்றாகும்.
இயேசு கிறிஸ்து கூறிய வகையில், 'இந்த சிறியவர்களில் எவருக்கேனும் யாராவது தடுமாற்றத்தை ஏற்படுத்துவாராயின், அவர்கள் கழுத்தைச் சுற்றி ஒரு பெரிய கல் தொங்கவிடப்பட்டு கடலின் ஆழத்தில் அவர்களை மூழ்கடித்து விடுவது சிறந்தது. மக்கள் தடுமாறும் விடயங்களால் உலகிற்கு துன்பமே நிகழ்கின்றது, இதுபோன்ற விடயங்கள் வர வேண்டும், அவர்கள் யார் மூலமாக வருகின்றார்களோ அவர்களுக்குத் துன்பமே' என்ற சிறுவர்களைப் பாதுகாப்பது பற்றிய வேதவசனத்திலிருந்தானதொரு கடுமையான எச்சரிக்கையை மேற்கோள் காட்டி நான் நிறைவு செய்கின்றேன். நாங்கள் உண்மையாகவும் வேகமாகவும் செயற்படும் வரை எமது உடன்படிக்கைகளின் நுட்பம் போதுமானதாக அமையாது. வன்கூவர் பிரகடனமானது சரியான திசையிலானதொரு படிக்கல்லாக அமையும்.
நன்றி