கோவிட்-19 தொற்றுநோயின் போது வெளிநாட்டு அமைச்சால் கொன்சியூலர் உதவிகள் வழங்கப்பட்டன

 கோவிட்-19 தொற்றுநோயின் போது வெளிநாட்டு அமைச்சால் கொன்சியூலர் உதவிகள் வழங்கப்பட்டன

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் பிரிவு,  பல்வேறு வேலைவாய்ப்புக்கள் மற்றும் உயர் படிப்புக்காக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு வசதியாக 2017 இல் செயற்படுத்தப்பட்ட மின்னணு ஆவண சான்றளிப்பு அமைப்பு மூலம் பல்வேறு ஆவணங்கள் சான்றுப்படுத்தப்படுகின்றது. கோவிட்-19 க்கு முந்தைய சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட சேவை தேடுனர்கள் இந்த அமைப்பின் மூலம் தினமும் உதவிகளைப் பெற்றனர். மின்னணு ஆவண சான்றளிப்பு ஒரு புதுமையான டிஜிட்டல் தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், இது விரைவான செயன்முறையுடன் சேவையை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டமையும் அதே வேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் உண்மையான நேரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களைச் சரிபார்ப்பதோடு, பயனாளிகளுக்கு இழப்பீடு, வழங்கப்படாத ஊதியம் மற்றும் சமூகப்  பாதுகாப்பு உரிமைகள், இலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் மனித உடல்களைத் திருப்பி அனுப்புதல், சிக்கித் தவிக்கும் மற்றும் ஆதரவற்ற இலங்கைய்களை திருப்பி அனுப்புதல் போன்ற ஏனைய சேவைகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுக் காவலில் உள்ள மீனவர்களை விடுவித்தல் ஆகியவற்றுக்கு இந்தப் பிரிவினால் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சின் எல்லைக்குள் கொன்சியூலர் சேவைகளின் பரவலாக்கம் குறித்த திட்டத்தின் கீழ் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் நிறுவப்பட்டன.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, பொது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, அமைச்சில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையையும் பொது வருகைகளையும் அமைச்சு மட்டுப்படுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் மற்றும் ஆதாரங்களுடன் மக்களின் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், கொன்சியூலர் விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர் பிரிவு பொதுமக்களுக்கான சேவைகளைத் தொடர்ந்தது. எனவே, சேகைள் தேவைப்படும் மக்கள் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்காக  வரிசையில் வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

கொன்சியூலர் விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர் பிரிவானது, சாத்தியமான வகையில்  இயல்பான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு எதிர்பார்க்கின்றது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 25

Please follow and like us:

Close