கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இயேசு கல்லூரிக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விஜயம்

 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இயேசு கல்லூரிக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விஜயம்

இலங்கை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இயேசு கல்லூரிக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விஜயம் செய்தார்.

பேராசிரியர் சேர் இவன் லோரன்ஸ் கியூ.சி, கௌரவ. சேர் ரூபர்ட்ஜெக்சன் பி.சி. கியூ.சி, பேராசிரியர் மட்ஸ் அன்டெனாஸ் கியூ.சி, பேராசிரியர் அண்டி ஹெய்ன்ஸ், பேராசிரியர் பெரி ரைடர், திருமதி. கிம் ஹொலிஸ் கியூ.சி மற்றும் கலாநிதி டொமினிக் தோமஸ் - ஜேம்ஸ் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றிய சட்ட வல்லுனர்களுக்கும், மற்றும் அவர்களது பெறுமதி வாய்ந்த  நுண்ணறிவு மற்றும் ஆலோசனைகளுக் காகவும் வெளிநாட்டு அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார்.

டேனியல் பிரென்னன் கியூ.சி. பிரபு மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரசாங்கத்திற்கான சர்வதேசப் பாடசாலையின் பணிப்பாளருமான திரு. அலெக்சாண்டர் டவுனர் ஆகியோரை பேராசிரியர் பீரிஸ் லண்டனில் தனித்தனியாகச்  சந்தித்தார்.

 வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

 2021 அக்டோபர் 31

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close