சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் இலங்கையில் வாகன ஆலையில் முதலீடு

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் இலங்கையில் வாகன ஆலையில் முதலீடு

சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் துணைத் தலைவர் திரு. வூ யி, இலங்கையில் வாகனத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொனவை 2021 அக்டோபர் 26ஆந் திகதியாகிய இன்றைய தினம் தூதரகத்தில் சந்தித்தார். அவர்கள் எம்.ஜி,  செர்ரி மற்றும் ப்ரொடொன் ரகங்களை இலங்கையில் உற்பத்தி செய்து விளம்பரப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனமானது, சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும். சீனாவின் தேசிய  வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏனைய  ஒத்த தயாரிப்புக்களை விநியோகிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்ததொரு நிறுவனமாகும்.

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், இலங்கையின் மைக்ரோ கார்களுடன்  ஏற்கனவே பயனுள்ள உறவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் மைக்ரோ கார்களுடன் விரிவாக்கப்பட்ட கூட்டு முயற்சியை ஆலோசித்து வருவதாக திரு. வூ யி தெரிவித்தார்.

வாகனத் துறையிலான முதலீடுகளை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாக தூதுவர் கலாநிதி கொஹொன தெரிவித்தார். ஒரு விரிவான திட்டத்தை முன்வைப்பதற்காக சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி  நிறுவனத்தை ஊக்குவித்தார். வாகனங்களுக்கான உள்நாட்டுச் சந்தை, மற்றும் உலகின் செழிப்பான பிராந்தியத்தில் இலங்கையின் இருப்பிடத்தின் அடிப்படையில் நிலவும் பரந்த சந்தையை தூதுவர் விளக்கினார். மேலும், தூதரகத்தின் முழுமையான ஆதரவையும் அவர் உறுதிப்படுத்தனார்.

துணைத் தலைவர் திரு. வூ அவர்களுடன் சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் திரு. யின் கிங், சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் துணைப் பொது முகாமையாளர் திரு. கு சாவோகாங், சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி  நிறுவனத்தின் துணைப் பொது முகாமையாளர் திருமதி. ஜு சியோமி மற்றும் சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் வர்த்தக முகாமையாளர் திரு. யான் வென்சுவோ ஆகியோர் இணைந்திருந்தனர்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 அக்டோபர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close