கென்யாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை கோவிட்-19 நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கல்

 கென்யாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை கோவிட்-19 நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கல்

இலங்கையில் அதிகரித்து வரும் கோவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீவிரமான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் கோவிட்-19 நிதியத்திற்கு தமது ஆகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

 கோவிட்-19 நிதியத்திற்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்மொழிவைப் பின்பற்றி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 எனவே, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான கோவிட்-19 பிரதிபலிப்புக்களில் அரசாங்கத்தின் கைகளை வலுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 25

Please follow and like us:

Close