குவாங்சோவில் இடம்பெற்ற தேயிலைக் கண்காட்சியில் இலங்கைக் கூடத்தை நோக்கி சீனப் பார்வையாளர்களை 'சிலோன் டீ'  ஈர்ப்பு

 குவாங்சோவில் இடம்பெற்ற தேயிலைக் கண்காட்சியில் இலங்கைக் கூடத்தை நோக்கி சீனப் பார்வையாளர்களை ‘சிலோன் டீ’  ஈர்ப்பு

சீனா தேயிலை சந்தைப்படுத்தல் சங்கம் மற்றும் குவாங்டாங் தேயிலை தொழில் சங்கம் ஆகியவற்றால் நடாத்தப்பட்ட 2021 நவம்பர் 25  முதல் 29 வரை இடம்பெற்ற தேயிலைக் கண்காட்சியில் சீனாவில் அமைந்துள்ள 5 முக்கிய இலங்கைத் தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் பங்கேற்பை குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 'சிலோன் டீ' வகைகளின் தனித்துவமான தோற்றம் மற்றும் தரம் தொடர்பில் விவரிக்கப்பட்டதன் பின்னர் அவை பார்வையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. பல பார்வையாளர்கள் தேயிலையை ருசித்து, கொள்வனவு செய்வதனை ஊக்குவிக்கும் வகையில் தேயிலையுடன் தொடர்புடைய இலங்கை சிற்றுண்டிகளும் தேநீரை சுவைக்கும் போது வழங்கப்பட்டன. இந்தக் கண்காட்சியில் பல கொள்வனவாளவர்களைக் கண்டறிந்து, உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காட்சியாளர்கள் மற்றும்  தேயிலை தொடர்பான ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை நிறுவனங்களால் முடிந்தது. இலங்கைத் தேயிலையானது கடந்த வருடங்களில் தேயிலைக் கண்காட்சியில் இலங்கையின் முக்கிய தேயிலை நிறுவனங்களால் பல தடவைகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

உலகத் தேயிலைக் கண்காட்சியில் இலங்கை பங்குபற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக  உலகளாவிய தேயிலைக் கண்காட்சியின் பிரதிநிதி மா ஸிலன் போன்ற பார்வையாளர்களுடன் கலந்துரையாடி, குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் பிரியங்கிகா தர்மசேன கண்காட்சியின் திறப்பு விழாவில் பங்கேற்று, இலங்கைக் கூடங்களை பார்வையிட்டார்.

சர்வதேச தேயிலை நிறுவனங்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தளங்களைக் கொண்ட ஒரு தொழில்முறைக் கண்காட்சியான தேயிலைக் கண்காட்சி, ஒவ்வொருவருக்குமிடையிலான தொடர்புகளை எளிதாக்கி, அவர்களின் தேநீர் மற்றும் சம்பந்தப்பட்ட  தயாரிப்புக்களுக்கான புதிய சந்தைகளை ஆராய்கின்றது. 2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கண்காட்சி தென் சீனாவில் உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

750,000 க்கும் மேற்பட்ட தொழில்முறைக் கொள்வனவாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் சுமார் 1000 முக்கிய உள்ளூர் மற்றும்  சர்வதேச தேயிலை நிறுவனங்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் பங்கேற்றன. நேபாளம், வியட்நாம் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்களும் தேயிலைக் கண்காட்சியில் பங்கேற்றன.

குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்,

குவாங்சோ

2021 டிசம்பர் 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close