குவாங்சி மாகாணத்தின் குயிலினில் நடைபெற்ற 2021 சீனா - ஆசியான் எக்ஸ்போ சுற்றுலாக்  கண்காட்சியில் முதல் முறையாக இலங்கை பங்கேற்பு

 குவாங்சி மாகாணத்தின் குயிலினில் நடைபெற்ற 2021 சீனா – ஆசியான் எக்ஸ்போ சுற்றுலாக்  கண்காட்சியில் முதல் முறையாக இலங்கை பங்கேற்பு

2021 அக்டோபர் 15-17 வரை குவாங்சி மாகாணத்தில் உள்ள குயிலினில் நடைபெற்ற 2021 சீனா -  ஆசியான் எக்ஸ்போ சுற்றுலாக் கண்காட்சியில் குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் முதன் முறையாகப் பங்கேற்றது. சுவர்களில் பொறிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் கலாச்சார இடங்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இலங்கையின் கூடமானது,

சில கைவினைப்பொருட்கள் மற்றும் இலங்கையின் பல்வேறு சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலங்களின்  தொலைக்காட்சி வீடியோக்களை ஒளிபரப்பி, பொதுமக்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பயண முகவர்களை இலங்கைக் கூடத்தை நோக்கி கவர்ந்தது. எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய நினைக்கும் பல நபர்கள் இலங்கையில் காணப்படும் பயண மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

குவாங்சோவுக்கு வெளியே உள்ள குவாங்சி மாகாணத்திலும், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலும்  நடைபெற்ற கண்காட்சி நிகழ்வொன்றில் துணைத் தூதரகம் பங்கேற்பது இதுவே முதல் முறையாவதுடன், இத்தகைய பங்கேற்பு குவாங்சோவிலிருந்து வெகு தொலைவில் இலங்கையைக் காண்பிப்பதற்கான வாய்ப்பை அளித்தது.

குவாங்சியில் உள்ள குயிலினில் நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட இலங்கையின்  துணைத் தூதுவர் பிரியங்கிகா தர்மசேன, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் திரு. சுவாங் சு, குவாங்சியின் ஆளுநர் திரு. லி பின், குயிலினின் மேயர் திரு. லி ச்சு மற்றும் ஏனைய உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சுற்றுலா, கலாச்சாரம் தொடர்பான அதிகாரிகளை சந்தித்தார்.

இந்தக் கண்காட்சியானது, சீனா, ஆசியான் நாடுகள் மற்றும் ஒரு வழி - ஒரு பாதையிலுள்ள முக்கிய நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பதற்காக, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டுள்ள 'ஒரு வழி - ஒரு பாதை முன்முயற்சியின்' உலகளாவிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலோபாயத்தின் கீழ், சீனா மற்றும் குவாங்சி மாகாணத்தின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சினால் இணைந்து நடாத்தப்படும் மதிப்புமிக்கதொரு கண்காட்சி ஆகும்.

கடல்சார் பட்டுப் பாதையில் உள்ள 40 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், தென்  கொரியா மற்றும் சீனப் பயண முகவர்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் பங்கேற்றன.

இலங்கையின் துணைத் தூதரகம்,

குவாங்சோ

2021 அக்டோபர் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close