ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொண்டு மதிய விருந்தில் இலங்கை பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொண்டு மதிய விருந்தில் இலங்கை பங்கேற்பு

2022 செப்டெம்பர் 22ஆந் திகதி ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் வியன்னாவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சர்வதேச தொண்டு மதிய விருந்தில் பல நாடுகளுடன் இணைந்து இலங்கை பங்குபற்றியது.

வியன்னாவில் உள்ள சுமார் 22 தூதரகங்கள் மற்றும் நிரந்தரப் பணிமனைகளின் பங்கேற்புடன் வியன்னா சர்வதேச மையத்தில் மதிய உணவு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நலத்திட்டம் 2023 க்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிதி திரட்டும் மதிய விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 1967  ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் வியன்னா, உலகெங்கிலுமுள்ள தேவைகளையுடைய சிறுவர்கள் மற்றும் தாய் - சேய் பராமரிப்புத் திட்டங்களுக்கு உதவுகின்றது.

இலக்கு, உணவு வகைகள் மற்றும் சிலோன் தேநீர் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான  வாய்ப்பை இந்த மதிய உணவு இலங்கைக்கு வழங்கியது.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

வியன்னா

2022 அக்டோபர் 07

Please follow and like us:

Close