ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு மற்றும் முதலீட்டுச் சபையுடன் இணையவழி வலையமர்வு ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு மற்றும் முதலீட்டுச் சபையுடன் இணையவழி வலையமர்வு ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையத்தள இணையவழி வலையமர்வில் 80க்கும் மேற்பட்ட எதிர்கால ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றன. ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு ஒருங்கிணைப்புக்களை எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பத் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை அவர் வலியுறுத்தினார். இலங்கையில் கிடைக்கும் உயர்தர கிரஃபைட்டில் 30% ஈ.வி. பெட்டரிகளுக்கான மூலப்பொருளாகும் எனக் குறிப்பிட்ட தூதுவர், உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புக்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வகையிலான ஒரு ஜிகா ஈ.வி. பெட்டரி தொழிற்சாலையை பரிசீலிக்குமாறு முன்மொழிந்தார்.

1.6 பில்லியனுக்கும் அதிகமான மக்களை அணுகக்கூடிய இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு இலங்கை என தூதுவர் குணசேகர குறிப்பிட்டார்.

நொரிடேக்கின் இருப்பு மற்றும் இலங்கையின் களிமண் செயன்முறைகளின் உயர் தரத்தையும் வலியுறுத்திய அவர், மட்பாண்டங்கள் தொடர்பான எந்தவொரு உற்பத்தி நிறுவனத்திற்கும் இலங்கையைப் பரிசீலிக்குமாறு அழைப்பு விடுத்ததுடன், தற்போது காணப்படுகின்ற போட்டித் தொழிலாளர், முகாமைத்துவம் மற்றும் பயன்பாட்டு விகிதங்களைக் குறிப்பிட்டார்.

முதலீட்டு சபையின் தலைவர் ராஜா எதிரிசூரிய வரவேற்புரை ஆற்றியதுடன் முதலீட்டு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசஞ்சித் விஜயதிலக விரிவான விளக்கவுரையை நிகழ்த்தினார்.

ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் டோக்கியோ யுகோ யசுனகாவும் இந்த வலையமர்வில் பங்கேற்றார்.

இலங்கைத் தூதரகம்,

டோக்கியோ

2022 பிப்ரவரி 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close