ஐக்கிய அரபு இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையர்கள்

வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து வருகைதரு வீசாவைப் பயன்படுத்தி அபுதாபிக்குள் பிரவேசித்த 17 இலங்கைப் பிரஜைகள் தொடர்பான சம்பவம் குறித்த அண்மைய ஊடகச் செய்திகள் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டதுடன், அந்த இடத்தில் 17 இலங்கையர்களைக் கண்டுபிடித்தனர்.

குறித்த இலங்கையர்களிடம் தூதரக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, தமக்கு பிரச்சினைகளோ முறைப்பாடுகளோ இல்லையென அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களில் இலங்கைக்கு நாடு திரும்ப சம்மதித்த ஒருவர் தூதரகத்தால் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இருப்பினும், முறையான சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தூதரகத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், மற்றவர்கள் 2022 நவம்பர் 15ஆந் திகதி ஓமானுக்குச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காக முழு அர்ப்பணிப்புடன் உள்ளன.

 

இலங்கைத் தூதரகம்,

அபுதாபி

2022 நவம்பர் 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close