ஐக்கிய அமெரிக்காவின் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் தொடர்ச்சியான இரண்டாவது வருடத்தில் நிலை 2 தரவரிசையை இலங்கை தக்கவைத்துக்கொண்டுள்ளது

ஐக்கிய அமெரிக்காவின் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் தொடர்ச்சியான இரண்டாவது வருடத்தில் நிலை 2 தரவரிசையை இலங்கை தக்கவைத்துக்கொண்டுள்ளது

ஐக்கிய அமெரிக்காவின் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் தொடர்ச்சியான இரண்டாவது வருடத்தில் நிலை 2 தரவரிசையை இலங்கை தக்கவைத்துக்கொண்டுள்ளது

ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் தொடர்ச்சியான இரண்டாவது வருடத்தில் நிலை 2 தரவரிசையை இலங்கை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 2018 யூன் 28ஆந் திகதி வெளியிடப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான அறிக்கையை https://www.state.gov/j/tip/rls/tiprpt/ எனும் இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆட்கடத்தல் தொடர்பான வருடாந்த அறிக்கையானது, திருத்தப்பட்ட 2000ஆம் ஆண்டின் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக, ஆட்கடத்தல்களுக்கு எதிராக போராடுவதனை கண்காணிப்பதற்கான ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் அலுவலகத்தையும், ஆட்கடத்தல்களுக்கு எதிராக போராடுவதனை கண்காணிப்பதற்கான ஜனாதிபதியின் உள் முகவர் செயலணியையும் தாபிப்பதற்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. அனைத்து நாடுகளையும் மதிப்பீடு செய்யும் இந்த வருடாந்த அறிக்கையை, கடத்தல்களுக்கு எதிரான மறுசீரமைப்புக்களை மேம்படுத்துவதற்கும், கடத்தல்களுக்கு எதிராக போராடுவதற்கும், தவிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் வழக்குத்தொடுப்பு செயற்பாடுகள் தொடர்பான வளங்களை இலக்காகக் கொண்ட கலந்துரையாடல்களில் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஈடுபடுவதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் பயன்படுத்துகின்றது. கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் 108ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 'கடத்தலை இல்லாதொழிப்பதற்கான ஆகக் குறைந்த தரங்களுக்கு' இணங்க செயற்படுவதற்காக அரசாங்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் அளவீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் மூன்று நிலைகளில் ஏதேனும் ஒன்றில் வைக்கப்படும்.

2013 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில், இலங்கை நிலை 2 கண்காணிப்புப் பட்டியலில் 4 தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு வைக்கப்பட்டு, கடத்தல்களுக்கு எதிராக போராடுவதற்காக அரசாங்கத்தின் உரிய முகவர்களினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்ப்பான நடவடிக்கைகளின் நோக்கில் 2017ஆம் ஆண்டில் 2ஆம் நிலைக்கு உயர்த்தப்பட்டது. அரச திணைக்களத்தின் இந்த வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்படட்டுள்ள நாடுகளின் வகைப்படுத்தலானது, ஐக்கிய அமெரிக்காவின் உதவிகளிலான குறிப்பிடத்தக்க மட்டுப்பாடுகள் மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் உதவிகள் தொடர்பில் 3ஆம் நிலையிலுள்ள நாடுகளின் அரசாங்கங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிகளில் பாதிப்புக்களைச் செலுத்துகின்றது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை அரசாங்கம் அதிகரித்த முயற்சிகளை நிரூபித்துள்ளமையினால், இலங்கை 2ஆம் நிலையில் தொடர்ந்து தக்கவைக்கப்படுவதாக 2018ஆம் ஆண்டிற்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகலாவிய மதிப்புக்களை வலுவிழக்கச் செய்வதும், நாடுகடந்த குற்றவியல் மற்றும் பயங்கரவாத வலையமைப்புக்களை ஊக்குவித்து, வளப்படுத்துவதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதுமான உலகலாவிய மனிதக் கடத்தல் தொடர்பான பிரச்சினையின் பரிணாமத்தை இலங்கை அங்கீகரித்து, ஏற்றுக்கொள்கின்றது. உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இந்த பிரச்சினைக்கு எதிராக போராடுவதற்காக ஐக்கிய அமெரிக்காவுடனும், ஏனைய இருதரப்பு பங்காளர்களுடனும் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனும் இணைந்து இலங்கை பணியாற்றிக்கொண்டிருக்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

2018 யூலை 4

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close