எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் புதிய அலுவலகம் இலங்கையில் திறந்து வைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக,  உயர்ஸ்தானிகர் மொரகொட எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் தலைமையகத்திற்கு விஜயம்

 எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் புதிய அலுவலகம் இலங்கையில் திறந்து வைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக,  உயர்ஸ்தானிகர் மொரகொட எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் தலைமையகத்திற்கு விஜயம்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள உலகளாவிய தகவல்  தொழில்நுட்ப நிறுவனமான எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார் (22). 50 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் 25,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் இணைந்து நிறுவனத்தின் பிரதான நிதி அதிகாரி பிரதீக் அகர்வால் மற்றும் அவரது சிரேஷ்ட  முகாமைத்துவக் குழுவைச் சந்தித்த உயர்ஸ்தானிகர் மொரகொட, எச்.டி.எல். டெக்னொலொஜிஸ் இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மற்றும் அவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்த வருமானம் கொண்ட அடுத்த தலைமுறை உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான  எச்.டி.எல். டெக்னொலொஜிஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட ஐம்பது நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, கண்டுபிடிப்பு ஆய்வுகூடங்கள் மற்றும் விநியோக நிலையங்களின் உலகளாவிய வலையமைப்பைக் கொண்டுள்ளது. உலகளவில், இது 187,000 பணியாளர்களைக் கொண்டுள்ளதுடன், ஃபோர்ச்சூனின் உலகளாவிய 2,000 நிறுவனங்களில் ஃபோர்ச்சூன் 500 மற்றும் 650 உட்பட 250 வாடிக்கையாளர்களை உள்ளடக்கியுள்ளது.

இலங்கையில் எச்.டி.எல். டெக்னொலொஜிஸின் முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இலங்கையில் அதன் புதிய கிளை பிரமாண்டமாகத்  திறந்து வைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, நொய்டாவில் உள்ள எச்.டி.எல். டெக்னொலொஜிஸ் தலைமையகத்திற்கான உயர்ஸ்தானிகர் மொரகொடவின் விஜயம் அமைந்திருந்தது. கொழும்பில் உள்ள வணிக கட்டிடமொன்றின் 20 மாடிகளை (200,000 சதுர அடி) குத்தகைக்கு எடுத்துள்ள எச்.டி.எல். டெக்னொலொஜிஸ், 2021 நவம்பர் 25ஆந் திகதி திறந்து வைக்கப்படும்.

இலங்கையில் உள்ள எச்.டி.எல். ஆனது ஆரம்பத்தில் 1100 இலங்கையர்களுக்கு அதிக சம்பளம் தரக்கூடிய தகவல் தொடர்பாடல்  வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், ஐந்து வருடங்களில் அந்த எண்ணிக்கையை 5000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் உயர்நிலைப் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் அதே நேரத்தில் அவர்களது பல்கலைக்கழகப் பட்டங்களை நிறைவு செய்வதற்காக 100% புலமைப்பரிசில்களை வழங்கும்.

எச்.டி.எல். ஸ்ரீ லங்கா நேரடியாக 49 ஃபோர்ச்சூன் 500 நிறுவனங்களுக்கு சேவை செய்யும்.

உயர்ஸ்தானிகர் மொரகொடவுடன் பிரதி உயர்ஸ்தானிகர் நிலூக கதுருகமுவ, அமைச்சர் ஆலோசகர் காமினி சரத் கொடகந்த மற்றும்  உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட பிரதம செயலாளர் தீபக் நதானி ஆகியோர் இணைந்திருந்தனர். தலைமை நிதி அதிகாரி அகர்வாலுடன் மூலோபாய துணைத் தலைவர் அபினவ் கோஷ், துணைத் தலைவர் பிரவீன் சேத் மற்றும் தவிசாளர் அலுவலகத்தின் மூலோபாய முன்முயற்சிகள் பிரதி முகாமையாளர் ஆஷிஷ் யாதவ் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது டில்லி

2021 நவம்பர் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close