ஊக்கியிலிருந்து வளர்ச்சிக்கான பொறிமுறைக்கு மாற்றுவதற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்திற்கான (IORA) இலங்கையின் அழைப்பு

ஊக்கியிலிருந்து வளர்ச்சிக்கான பொறிமுறைக்கு மாற்றுவதற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்திற்கான (IORA) இலங்கையின் அழைப்பு

Photo_IORA (1)

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (IORA) சிரேஷ்ட அதிகாரிகளின் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் 8ஆவது குழுச்சந்திப்பானது 2018 யூலை 30 - 31ஆந் திகதிகளில் தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் இடம்பெற்றது.

அங்குரார்ப்பண அமர்வில் கருத்துத் தெரிவிக்கையில், இந்து சமுத்திர பிராந்தியத்தின் முதன்மையான அமைப்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கமானது ஊக்கியிலிருந்து வளர்ச்சிக்கான பொறிமுறைக்கு மாறுவதற்று ஏதுவான தருணம் உதித்துள்ளமை தொடர்பில் இலங்கைத் தூதுக்குழுவினருக்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் (பல்தரப்பு) பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரோஜா சிறிசேன வலியுறுத்தினார். 2050ஆம் ஆண்டளவில் உலகின் அரைவாசியான சனத்தொகையினரின் இருப்பிடமாக அமையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள பிராந்தியமொன்றிற்கு அதிகம் தேவையான அபிவிருத்திகளை வழங்குவதற்கான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் அவர் சிறப்பித்துக் கூறினார். புதிய பொருளாதார எல்லையாக விளங்கும் சமுத்திரங்களின் முக்கியத்துவம் தொடர்பில் குறிப்பிடுகையில், பிராந்தியத்திற்கு நன்மைகளை அளிக்கும் ஒருக்கிணைந்த ஏற்பாடுகளை ஒன்று சேர்ப்பதற்கான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளின் தேவை தொடர்பில் இலங்கைத் தூதுக்குழுவினருக்கு தலைமை தாங்கிய அவர் குறிப்பிட்டார். பொருளாதாரம், மூலோபாயம் மற்றும் சுற்றாடல் தொடர்பான கண்ணோட்டத்தில் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் அவர் குறிப்பாக கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தொழிற்பாட்டுக் குழுவை தாபிப்பதற்கான பயிற்சிப்பட்டறையை செப்டம்பர் மாதத்தில் கொழும்பில் நடாத்துவதற்கு, கடல்வள பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தூணின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் இலங்கை அறிவிப்புச் செய்தது. சிரேஷ்ட அதிகாரிகளின் குழுச்சந்திப்பின் இணைப்பாகமாக, அவுஸ்திரேலியா, இந்தியா, மடகஸ்கார், தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய மையக் குழு சந்தித்ததுடன், அதில் தொழிற்பாட்டுக் குழுவை தாபிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

இணைத்தொழிற்பாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் பிராந்தியத்தின் கடல்வள பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒத்துழைப்பிற்கான நடைமுறை விடயங்களை அடையாளங்காணுதல் ஆகியன இந்த தொழிற்பாட்டுக் குழுவின் குறிக்கோள்கள் ஆகும். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் மையக் குழுக்களான அனர்த்த அபாய முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றின் பாகமாக இலங்கை இணைந்து கொண்டது.

சிரேஷ்ட அதிகாரிகளின் குழுச்சந்திப்பிற்கான இலங்கையின் தூதுக்குழுவானது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சமுத்திர விவகாரங்கள் மற்றும் காலநிலை மாற்ற பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சசிகலா பிரேமவர்த்தன, இலங்கை கடற்படையைச் சேர்ந்த கப்டன் எச்.எம்.பி. சேனாரத்ன மற்றும் பிரிடோரியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் அமைச்சர் ஆலோசகர் திருமதி. பிரியாங்கனி ஹேவாரத்ன ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
01 ஆகஸ்ட் 2018
Photo_IORA_2
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close