இலங்கை தெங்கு உற்பத்திகளை ஊக்குவிக்கும் “ஹாய் ஜப்பான்” வர்த்தகக்  கண்காட்சி

 இலங்கை தெங்கு உற்பத்திகளை ஊக்குவிக்கும் “ஹாய் ஜப்பான்” வர்த்தகக்  கண்காட்சி

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிதியளிக்கப்பட்டு ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட "ஹாய் ஜப்பான்" வர்த்தகக் கண்காட்சியில்    தூதுவர் மற்றும் தூதரக  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியானது   இலங்கையிலுள்ள  11  நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட பரந்த அளவிலான தெங்கு தொடர்பான ஏற்றுமதிப் பொருட்களை காட்சிப்படுத்தியது. தேங்காய் எண்ணெய், சுத்தமான   தேங்காய் எண்ணெய், எம்.சி.டி. எண்ணெய், தேங்காய் மா, உலர்ந்த தேங்காய், தேங்காய் சிப்ஸ், பால், பால் மா, கருப்பட்டி, பாணி மற்றும் பாலேடு  உள்ளிட்டவை  இதில் உள்ளடங்கும். தேங்காய் வினாகிரி , அமினோ, தேங்காய் வெண்ணெய், சர்க்கரை, இளநீர்  மற்றும்  செவ்விளநீர்  உற்பத்திகள்  போன்ற புதிய உற்பத்திப்  பொருட்களும்  காட்சிக்கு வைக்கப்பட்டன.

சுத்தமான  தேங்காய் எண்ணெய், தேங்காய் மா மற்றும் உலர்ந்த தேங்காய் போன்ற மிகவும்  பிரபலமான தயாரிப்புக்களுடன் கூடிய இந்தக் கூடம் தொடர்பில் அறுபதுக்கும் மேற்பட்ட மானது, ஜப்பானியக் கொள்வனவாளர்கள் தகவல்களைக் கேட்டறிந்து கொண்டனர். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஏற்றுமதியாளர்களை  இணையவழி சந்திப்பின் மூலம்   நேரடியாக எதிர்காலக் கொள்வனவாளர்களுடன் இணைப்பதற்கு தூதரகம் எதிர்பார்க்கின்றது. மொழிபெயர்ப்பு, எழுத்தமைப்புச் சேவைகள், மாதிரிகள் மற்றும் சிற்றேடுகளை கப்பலில் அனுப்புவதற்கு முன்னர் ஜப்பானிய விதிமுறைகளுடன் பொதியிடல் தரம் இணக்கப்படுகின்றதா என்பதனைச் சரிபார்த்தல் ஆகிய சேவைகளை தூதரகம் வழங்குகின்றது. இது அனைத்து இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கும் வழங்கப்படுகின்ற சேவையாகும்.

இலங்கைத் தூதரகம்,

டோக்கியோ

2021 ஒக்டோபர் 12

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close