இலங்கை - சிம்பாப்வே உறவுகளை மேம்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் அமரசேகர எதிர்பார்ப்பு

இலங்கை – சிம்பாப்வே உறவுகளை மேம்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் அமரசேகர எதிர்பார்ப்பு

பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எஸ். அமரசேகர பிரிட்டோரியாவில் உள்ள சிம்பாப்வே தூதுவர் டேவிட் ஹமாட்ஸிரிபியை பிரிட்டோரியாவில் உள்ள சிம்பாப்வே தூதரகத்தில் வைத்து அண்மையில் சந்தித்தார்.

இலங்கை மற்றும் சிம்பாப்வே இடையே இருக்கும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற 9 நாடுகளில் சிம்பாப்வேயும் ஒன்றாகும்.

இந்த சந்திப்பின் போது, நல்ல செயற்றிறன் மற்றும் புதுமையான யோசனைகளை வெளிப்படுத்தும் இரு நாடுகளினதும் வெற்றிக் கதைகளின் நிபுணத்துவம் ஃ அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கான இலங்கை மற்றும் சிம்பாப்வே போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இடையேயான அதிகரித்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் அமரசேகர வலியுறுத்தினார். மேலும், மூலப்பொருட்களை வழங்குவதில் வர்த்தக வாய்ப்புக்கள், பருவகால மரக்கறிகள் மற்றும் பழங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போன்ற சாத்தியமான பகுதிகளை இன்னும் இரு தரப்பினரும் கையாளவில்லை என உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

சிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு இடையே தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டியமைக்காக உயர்ஸ்தானிகருக்கு தூதுவர் ஹமாட்ஜிரிபி நன்றிகளைத் தெரிவித்தார். சிம்பாப்வேயில் இருந்து உலக சந்தைகள் வரை விவசாயப் பொருட்களின் வகைகள் மற்றும் அந்த விவசாயப் பொருட்களுக்ளான இயற்கை உரத்தின் வெற்றிகரமான பயன்பாடு ஆகியவற்றை அவர் மேலும் விளக்கினார். இந்தக் கலந்துரையாடலில், விவசாயத்தில் நாட்டை இயற்கை மயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் அண்மைய முயற்சிகளில், இயற்கை உர உற்பத்தி செயன்முறை மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய தொழில்நுட்ப அறிவை விவசாயத் துறைகளில் இலங்கை அதிகாரிகளை ஒருங்கிணைக்கவும் பரிமாற்றவும் உதவிளை வழங்குமாறு உயர்ஸ்தானிகர் அமரசேகர தூதுவர் ஹமாட்ஜிரிப்பிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில் இரு தூதரகங்களினதும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

பிரிட்டோரியா

2021 செப்டம்பர் 09

 

 

Please follow and like us:

Close