இலங்கை இரத்தினங்கள் ரஷ்யாவில் ஊக்குவிப்பு

இலங்கை இரத்தினங்கள் ரஷ்யாவில் ஊக்குவிப்பு

இலங்கையின் தேசிய இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஆணைக்குழு மற்றும் ரஷ்யன் கிளப் ஒப் ஜூவல்லரி டிரேட் ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை ரஇரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் மற்றும் ரஷ்ய நகை நிறுவனங்களுக்கு இடையேயான மெய்நிகர் வணிக சந்திப்பொன்றை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 நவம்பர் 11ஆந் திகதி ஏற்பாடு செய்தது. ரஷ்யாவில் இலங்கையின் விலையுயர்ந்த கற்களை ஊக்குவிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். மெய்நிகர் ஊக்குவிப்பு வணிக சந்திப்பில் சுமார் 35 ரஷ்ய நகை வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொண்டதுடன், இலங்கை இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் அவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியது.

மெய்நிகர் சந்திப்பின் போது, நாட்டில் உள்ள விலைமதிப்பற்ற கற்களின் தனித்துவமான செல்வம் மற்றும் இத்துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் உட்பட இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் விரிவான கண்ணோட்டத்தை தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் அயோமா டயஸ் வழங்கினார். மேலும், தயாரிப்பு அமைப்புக்கள் மற்றும் தமது நிறுவனங்களால் வழங்கப்பட்ட சேவைகளை சபையர் கெப்பிட்டல் குரூப் அன்ட் சபையர கட்லர்ஸ் லிமிடட், ரீகல் ஜெம்ஸ், புன்சிரி ஜெம்ஸ் மற்றும் பிரியந்த ஜெம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் விளக்கினர்.

இரு நாடுகளினதும் இரத்தினம் மற்றும் ஆபரணத் துறைகளில், குறிப்பாக பௌதீக ரீதியான தொடர்புகள் தற்போதைய தொற்றுநோய் நிலைமை காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான மெய்நிகர் நிகழ்வின் முக்கியத்துவத்தை வெபினாரில் உரையாற்றிய ரஷ்யக் கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனித ஏ. லியனகே எடுத்துரைத்தார்.

குழு ரஷ்ய நகை வர்த்தகம் என்பது மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கு மட்டுமல்லாமல், நவீன சந்தை வழிமுறைகளை உருவாக்குவதற்கும் நகைகளில் வணிக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஆர்வமுள்ள உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் மிகப்பெரிய சங்கமாகும்.

இலங்கைத் தூதரகம்,

மொஸ்கோ

2021 நவம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close