இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கொரியக் குடியரசின் பிரதமருடன் சந்திப்பு

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கொரியக் குடியரசின் பிரதமருடன் சந்திப்பு

 இலங்கைத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு  சியோலில் வைத்து அமைச்சர்  பேராசிரியர் ஜி.எல்பீரிஸ் கோரிக்கை

கொரியக் குடியரசின் பிரதம மந்திரியை சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைத்  தொழிலாளர்களுக்கு கொரியக் குடியரசில் அதிகரித்த வேலை வாய்ப்புக்கள் குறித்து கோரிக்கை விடுத்தார்.

தற்போது தென் கொரியாவில் சுமார் 22,000 இலங்கைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் சுமார் 520  மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் எமது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக தென் கொரியாவிற்கு இலங்கைத் தொழிலாளர்கள் திரும்புவது இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் படிப்படியாகத் திரும்புவதற்கு அனுமதித்தமைக்காக கொரியக் குடியரசிற்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையில் இருந்து இரண்டு தொகுதியினர் சியோலுக்கு வருகை தந்துள்ளதாகவும், முதலாவது தொகுதியினர் டிசம்பர் 8ஆந் திகதியும், இரண்டாவது தொகுதியினர் டிசம்பர் 22ஆந் திகதியும் கொரியாவை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈ.பி.எஸ். திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விரிவாக்கப்பட்ட வாய்ப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அவர், அனைத்து சாதனை நோக்கங்களுக்காகவும், 16 தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளில் வாராந்த அடிப்படையில் சியோலுக்கு நேரடியாகச் செயற்படும் ஒரே தேசிய விமான நிறுவனம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மட்டுமே என சுட்டிக்காட்டினார்.

முழுமையான கொரியக் குடியரசில் 80க்கும் குறைவான இலங்கைப் பணியாளர்கள் இதுவரை கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கையில் பின்பற்றப்பட்ட சுகாதார நடவடிக்கைகளின் செயற்றிறனை வெளிப்படுத்துவதாகவும் அவர்  வலியுறுத்தினார். கொரியக் குடியரசில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதுடன், சியோலுக்கு அடுத்தடுத்து வரும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என  அவர் கேட்டுக் கொண்டார்.

1970ஆம் ஆண்டில், கொரியக் குடியரசின் மொத்த ஏற்றுமதிகள் அண்ணளவாக 835 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், 2019ஆம் ஆண்டில் ஐந்து தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கொரியக் குடியரசின் ஏற்றுமதியின் பெறுமதி 610 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது என்ற உண்மையை பேராசிரியர் பீரிஸ் சுட்டிக் காட்டினார். இது உலகின் எந்தப் பகுதியிலும் சில  இணைகளுடன் ஒரு அற்புதமான அதிகரிப்பைக் குறித்து நிற்கின்றது. இலங்கைத் தொழிலாளர்களின் தொழில், அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவை இந்த சாதனைக்கு ஓரளவு பங்களித்துள்ளதாக பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.

கொரியக் குடியரசில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளை தென்கொரிய அரசாங்கம்  தீவிரமாக ஆராயும் என கொரியக் குடியரசின் பிரதமர் தெரிவித்தார்.

கொரியக் குடியரசின் பிரதமருக்கும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் அரசியல் விவகாரங்கள்,  வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் சர்வதேச அரங்குகளிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 ஜனவரி 07

Please follow and like us:

Close