இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயம் இரண்டு வெளிச்செல்லும் சுற்றுலா செயற்பாட்டுத்  தூதுக்குழுக்களை முன்னெடுப்பு

இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயம் இரண்டு வெளிச்செல்லும் சுற்றுலா செயற்பாட்டுத்  தூதுக்குழுக்களை முன்னெடுப்பு

 

இந்தியப் பயணிகளுக்காக இலங்கை சுற்றுலாவை மீண்டும் தொடங்கிய பின்னர், இந்தியப் பயண முகவர் சங்கம்  மற்றும் இந்தியப் பயண முகவர் கூட்டமைப்பிலிருந்து இரண்டு வெளிச்செல்லும் சுற்றுலா செயற்பாட்டுத் தூதுக்குழுக்களை சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயம் நடாத்தியது. இந்தத் தூதுக்குழுக்கள் முறையே 2021 செப்டம்பர் 23 மற்றும் 24ஆந் திகதிகளில் இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயத்தில் நடாத்தப்பட்டன.

தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளின் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பயண இடமாக ஊக்குவிப்பதும், இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்பதுமே இந்த சந்திப்பின் நோக்கங்களாக இருந்தன.

பிரதிநிதிகளை உரையாற்றிய துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி. வெங்கடேஸ்வரன், புதிய இயல்பான சூழ்நிலையில் இலங்கை சுற்றுலாவுக்கான முன்னேற்ற வழியை பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன், இலங்கைக்கு  அதிகமான இந்தியப் பயணிகளை ஈர்ப்பதற்காக, 'ராமாயண யாத்திரை', 'முருகன் பாதை' மற்றும் 'பஞ்சலிங்கம் பாதை' ஆகியவற்றை ஊக்குவிக்க இலங்கையின் தயார்நிலையை வலியுறுத்தினார்.

சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட தென்னிந்திய இடங்களுக்கு கொழும்பில் இருந்து விமான இணைப்பை முன்னிலைப்படுத்தி, சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விற்பனை முகாமையாளர் திரு. நீலின பத்திரன ஒரு விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார். மேலும், அவர் தேசிய விமானத்தின் 'ஒன்றை கொள்வனவு செய்து ஒன்றை இலவசமாகப் பெறல்' சலுகையை வலியுறுத்தியதுடன்,  இது 2021 டிசம்பர் 31 வரை பயணிகளுக்குக் கிடைக்கும்.

இலங்கை சுற்றுலாவை இந்தியாவுக்குத் திறப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துணை உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய சுற்றுலா முகவர் சங்கத்தின் தூதுக்குழுவின்  தலைவரும், இந்திய தெற்கு பிராந்தியத்தின் சுற்றுலா முகவர் சங்கத்தின் செயலாளருமான திரு. கருணாகரன் பாராட்டினார். மேலும், அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமான அட்டவணையில் மாற்றங்கள் மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

இந்திய பயண முகவர் கூட்டமைப்பின் தெற்கு பிராந்தியத்தின் தலைவர் திரு. அருள் லசரன், இந்திய பயண மற்றும்  சுற்றுலா நடத்துனர்களுக்கான பயண இடமாக இலங்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், குறிப்பாக எம்.ஐ.சி.இ. சுற்றுலா மற்றும் திருமண இலக்குப் பயணிகளுக்கான வரிகளைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார்

கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது,இலங்கைக்கு வந்தவுடன் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்,  தற்போதைய விசா நடைமுறை மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் போன்ற பல கேள்விகள் பங்கேற்பாளர்களால் எழுப்பப்பட்டன. இந்தக் கேள்விகளுக்கு துணை உயர் ஸ்தானிகர் மற்றும் குழுவினர் வெற்றிகரமாகப் பதிலளித்தனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் ஆகியவை புதிய சாதாரண சூழ்நிலையில் இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் சில திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும் ஏனைய வரிசை நிறுவனங்களுக்கான தனது பரிந்துரைகளை வழங்க துணை உயர் ஸ்தானிகர் ஒப்புக்கொண்டார்.

ஒவ்வொரு தொடர்பிலும், இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயத்தின் மூன்றாம் செயலாளர் (வர்த்தகம்) திரு.  டிலங்கா ஹெட்டியாராச்சி, இந்திய பயண முகவர் சங்கம் மற்றும் இந்திய பயண முகவர் கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புக்களாலும் கொடுக்கப்பட்ட உத்வேகத்தைப் பாராட்டியதுடன், இந்திய பயணிகளின் விருப்பமான சுற்றுலாத் தலமாக இலங்கையை ஊக்குவிக்கவும் திட்டமிடவும் தமது ஆதரவை நாடினார்.

இந்திய பயண முகவர் சங்கம் மற்றும் இந்திய பயண முகவர் கூட்டமைப்பு ஆகியன இந்தியாவில் உள்ள முக்கிய  சுற்றுலா மற்றும் சுற்றுலா இயக்க சங்கங்கள் ஆவதுடன், அவை கணிசமான உறுப்பினர்களை நாடளாவிய ரீதியாகக் கொண்டுள்ள அதே வேளை, இந்தியாவின் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இலங்கையின் துணை உயர் ஸ்தானிகராலயம்

சென்னை

2021 செப்டம்பர் 30

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close