இலங்கையின் ஐசிடி/பிபிஎம் நாட்டின் 'சாமர்த்தியமான தீவு' தர அடையாளம் லக்ஸம்பேர்க்கில் உள்ள  தகவல் தொடர்பாடல்  தொழினுட்ப டிஜிட்டல் வாரத்தில் ஊக்குவிப்பு

 இலங்கையின் ஐசிடி/பிபிஎம் நாட்டின் ‘சாமர்த்தியமான தீவு’ தர அடையாளம் லக்ஸம்பேர்க்கில் உள்ள  தகவல் தொடர்பாடல்  தொழினுட்ப டிஜிட்டல் வாரத்தில் ஊக்குவிப்பு

 

2021 செப்டம்பர் 13 முதல் 17 வரை லக்சம்பேர்க்கில் நடைபெற்ற தகவல் தொடர்பாடல் தொழினுட்ப டிஜிட்டல்  வாரத்தில் இலங்கையின் ஐசிடி/பிபிஎம் நாட்டின் தர அடையாளம் 'சாமர்த்தியமான தீவு' - ஐஓஐ ஊக்குவிக்கப்பட்டது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மாநாட்டு மையத்தில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப டிஜிட்டல் வாரத்தின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப வசந்த ஐரோப்பாக் கண்காட்சியில் ஏழு (7) இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை ஏற்பாடு செய்தது. அரிமாக் லங்கா பிரைவேட் லிமிடெட், ஈசி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், பொடென்சா பிரைவேட் லிமிடெட், அகஸ்டரி பிரைவேட் லிமிடெட், கேபேஜ்ஏப்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்டெலிஜென்சா ஹப் பிரைவேட் லிமிடெட்  மற்றும் ஷேட்ஸ் ஐடி சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கைத் தூதுக்குழுவில் இணைந்திருந்தனர்.

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப டிஜிட்டல் வாரம் ஃபின்டெக், டிஜிட்டல் டெக் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளுடன், கருப்பொருள் பகுதிகள் உட்பட பல  அம்சங்களை வழங்கியது.

லக்சம்பேர்க்கிற்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வதம் இலங்கைக் கூடாரத்தை திறந்து வைத்ததுடன்,  ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்தில் தற்போதைய டிஜிட்டல் மாற்றத்தின் கீழ் அளவற்ற வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு தகவல் தொடர்பாடல் தொழினுட்ப வசந்த ஐரோப்பாவில் தொடர்ச்சியான பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

2021 செப்டம்பர் 14ஆந் திகதி நடைபெற்ற டிஜிட்டல் விநியோகச் சங்கிலி மாநாட்டில், ஐ.எப்.எஸ். ஆய்வகங்களின்  துணைத் தலைவர் திரு. பாஸ் டி வோஸ், 'எதிர்காலத்திற்கான நிறுவன மென்பொருளை உருவாக்குதல், இலங்கையின் கண்டுபிடிப்புத் திறன் மற்றும் புத்திக் கூர்மை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தகவல் தொடர்பாடல் தொழினுட்ப டிஜிட்டல் வாரம் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஃபின்டெக், விண்வெளித் தொழில்நுட்பம், விநியோகச் சங்கிலித் துறையில் புதுமை, சமீபத்திய தொழில்நுட்பப் போக்குகள்  மற்றும் கண்டுபிடிப்புக்களின் கண்காட்சிகள் மற்றும் விளக்கங்களின் மூலம் தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பங்கேற்பாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கியது. தகவல் தொடர்பாடல் தொழினுட்ப வசந்தகால ஐரோப்பா 2021, சக நண்பர்;கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் வலையமைப்பை மேற்கொள்வதற்கானதொரு சிறந்த தளமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத் திறன்களை வெளிப்படுத்தவும், இலங்கையை உயர் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான துணைப் பிராந்திய தொழில்நுட்ப மையமாக ஊக்குவிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

தனிப்பட்ட பங்கேற்பாளர்களைத் தவிர, இலங்கையின் பல தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனங்கள்  வணிகக் கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் உச்சிமாநாட்டில் மெய்நிகர் ரீதியாகப் பங்குபெற்றன.

பங்கேற்பாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய வாடிக்கையாளர்களுடன் பல வலுவான வணிக முன்னணிகளைப்  பெற்றுக்கொள்ள முடிந்தது. மேலும், நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்தில் தமது வணிகத்தை விரிவுபடுத்துவதற்குச் சாத்தியமான பங்காளிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றன.

இலங்கைத் தூதரகம்,

பிரஸ்ஸல்ஸ்

2021 அக்டோபர் 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close