இலங்கையர்களுக்கு 550 புதிய ஐக்கிய அமெரிக்கா வேலை வாய்ப்புக்கள்

 இலங்கையர்களுக்கு 550 புதிய ஐக்கிய அமெரிக்கா வேலை வாய்ப்புக்கள்

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புடன் இணைந்து, அமெரிக்காவில் 550 வேலை வாய்ப்புக்களுக்கான உறுதி செய்யப்பட்ட தொழில் உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தூதுவர் மகிந்த சமரசிங்க புளோரிடாவின் மெசர்ஸ் கர்மா சேர்விசஸ் எல் எல் சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கர்மா சேர்விசஸ் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்பிற்கு இடையேயான ஒப்பந்தத்தை செய்து கொண்டதுடன், இதன் வாயிலாக 250 பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 200 செவிலிய உதவியாளர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழுமையாக அரசுக்குச் சொந்தமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் துணை நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்பு, உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மேற்கொள்ளவுள்ளது. வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புடன் இணைந்து, அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களுக்கான சட்டப்பூர்வ வேலை வாய்ப்புக்களைப் பாதுகாப்பதற்கான மேலதிக வழிகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது.

இலங்கைத் தூதரகம்                                                  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்பு

வொஷிங்டன் டி.சி.                                                      கொழும்பு, இலங்கை

2023 ஜனவரி 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close