இலங்கைப் பிரயாணிகளுக்கு வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கை

இலங்கைப் பிரயாணிகளுக்கு வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கை

இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பணவையும் கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எதிர்காலத்தில் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகளையும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கின்றது.

இலங்கைக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ உரிய அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தவிர எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கம் அளிக்கவில்லை என வெளிநாட்டு அமைச்சு இதன்மூலம் அறிவிக்கின்றது.

நாட்டில் அதிகரித்து வரும் நோயாளர் தொகையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீளழைத்து வருவதற்கான செயன்முறையானது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கப்படும்.

மேலதிக மற்றும் உண்மையான தகவல்களுக்காக வெளிநாட்டில் வசிப்பவர்கள் உங்கள் அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் கவலைகளை இலங்கை வலை இணையதளத்தில் https://www.contactsrilanka.mfa.gov.lk/ என்ற முகவரியில் பதிவு செய்யவும்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2020 நவம்பர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close