இந்தோனேசியாவில் உள்ள பௌத்த சங்கங்கள் இலங்கைக்கு மருந்துகள் மற்றும்  மருத்துவ உபகரணங்களை நன்கொடை

இந்தோனேசியாவில் உள்ள பௌத்த சங்கங்கள் இலங்கைக்கு மருந்துகள் மற்றும்  மருத்துவ உபகரணங்களை நன்கொடை


இந்தோனேசிய பௌத்தர்களின் பிரதிநிதிகள் சங்கம் (வாலுபி), இந்தோனேசிய தேரவாத பௌத்த சபை (மகபுதி), பெண்கள் தேரவாத பௌத்த குழு (வந்தனி) மற்றும் தேரவாத இளைஞர் புத்த சங்கம் (பத்ரிய) ஆகிய இந்தோனேசியாவின் பௌத்த சங்கங்கள் 2022 ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை மக்களுக்கு 19,296.11 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கின. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எக்ஸ்போலங்கா ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தூதரகம் இந்த மருந்துகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

இந்த நன்கொடை இந்தோனேசியா மற்றும் ஆசியானுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகரவிடம் தூதரக வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. நன்கொடையை ஏற்றுக்கொண்ட தூதுவர் யசோஜா குணசேகர, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மக்களுக்கு மிகவும் தேவையான தாராள உதவிகளுக்காக இந்தோனேசியாவின் பௌத்த சங்கங்களுக்கு நன்றியையும் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் பௌத்த சங்கங்கள் தேசிய புற்றுநோய் நிறுவனத்துடன்  (அபேக்ஷா மருத்துவமனை) ஒருங்கிணைந்து மேற்கூறிய மருத்துவமனைக்கு குறிப்பாகத்  தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை நன்கொடையாக வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2022 அக்டோபர் 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close