அமெரிக்க மாநிலங்களின் அமைப்புக்கு தூதுவர் சமரசிங்க நற்சான்றிதழ்களை கையளிப்பு

அமெரிக்க மாநிலங்களின் அமைப்புக்கு தூதுவர் சமரசிங்க நற்சான்றிதழ்களை கையளிப்பு

மெக்ஸிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க மாநிலங்களின் அமைப்பின் பொதுச் செயலாளரை 2022 அக்டோபர் 28, வெள்ளிக்கிழமை, வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இந்த அந்தஸ்துள்ள 71 நாடுகளில் ஒன்றான அமைப்புக்கு நிரந்தரப் பார்வையாளராக நற்சான்றிதழ்களை அவர் கையளித்தார். பொதுச்செயலாளர் நாயகம்  (முன்னாள் தூதுவர், உருகுவேவைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர் மற்றும் செனட் உறுப்பினர்) உடனான சந்திப்பின் போது, தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இன்றுவரை அடையப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து இலங்கைத் தூதுவர் விளக்கினார்.

35 உறுப்பு நாடுகளில் (அமெரிக்கா, கனடா, பிரேசில் மற்றும் கியூபா) நான்கு பணிமனைகள்  மட்டுமே இயங்கும் அமெரிக்க நாடுகளின் அமைப்பில் இலங்கையின் வதிவிட இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் பற்றாக்குறைக்கு தூதுவர் விளக்கினார். ஏனைய மாநிலங்களுடனான உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அமெரிக்க மாநிலங்களின் அமைப்பின் சிறந்த அலுவலகங்களைப் பயன்படுத்த முடியுமா என்பதை பொதுச்செயலாளரிடம் விசாரித்ததுடன், அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சாதகமாக பதிலளிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது அமெரிக்க மாநில நாடுகளின் அமைப்புடன் வர்த்தகத்தை  மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குறிப்பிடப்பட்டன. இதுபோன்ற முயற்சிகளை பொதுச்செயலாளர் வரவேற்றார். இலங்கையைப் பார்வையிட தூதுவர் அல்மக்ரோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இதற்கு பொதுச்செயலாளர் சாதகமாக பதிலளித்தார்.

நிரந்தரப் பார்வையாளர்கள் அமெரிக்க மாநிலங்களின் பொதுச் சபை மற்றும் நிரந்தர சபை  மற்றும் அவர்களின் பிரதான குழுக்களின் அமைப்பின் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதுடன், சம்பந்தப்பட்ட தலைமை அதிகாரியால் அழைக்கப்பட்டால், அந்த அமைப்புக்களின் மூடிய கூட்டங்களிலும் கலந்து கொள்வர். அவர்கள் அமைப்பின் ஆவணங்களையும் வெளியீடுகளையும் பெறுகின்ற அதே வேளை, அமெரிக்க மாநிலங்களின் அமைப்பால் கூறப்பட்ட விஷேட மாநாடுகள் மற்றும் ஏனைய கூட்டங்களிலும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றார்கள். நிரந்தரப் பார்வையாளர்கள் அமெரிக்க மாநிலங்களின் திட்டங்களின் பல்வேறு அமைப்புக்களுக்கான பயிற்சி வாய்ப்புக்கள், நிபுணர் சேவைகள், உபகரணங்கள் மற்றும் பணப் பங்களிப்புக்கள் ஆகிய வகையில் தமது ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிதிப் பங்களிப்புக்கள், தொழில்நுட்ப உதவி, தொழில்முறைப் பயிற்சி வாய்ப்புக்கள் மற்றும் விஷேட நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், கல்விப் புலமைப்பரிசில் போன்ற வகையில் நிரந்தரப் பார்வையாளர்களுடன் அமெரிக்க மாநிலங்களின் ஒத்துழைப்பு இணைந்து செயற்படுகின்றது.

நிரந்தரப் பார்வையாளர் நிலையிலிருந்து பெறும் முக்கிய நன்மைகள் ஏராளமானவையாகும்.  அந்த வகையில், குறிப்பாக மேற்கு அரைக்கோளத்தின் அனைத்து நாடுகளிலும் இல்லாத நிரந்தரப் பார்வையாளர்களுக்கு, அமெரிக்க மாநிலங்களின் அமைப்பு அனைத்து உறுப்பு நாடுகளுடனான உறவுகளை ஒரே இடத்தில் வலுப்படுத்துவதற்கானதொரு தனித்துவமான மன்றத்தை வழங்குவதுடன், இது ஒரு பயனுள்ள ஒத்துழைப்பு வசதியாளராகவும் செயற்படுகின்றது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களை இடை - அமெரிக்க மட்டத்தில் கூட்டுவதற்கான முக்கிய அரசியல் மன்றமாக, நிரந்தரப் பார்வையாளர்கள் அமெரிக்க மாநிலங்களின் உறுப்பு நாடுகளின் அமைப்பினரிடையே மிகவும் பயனுள்ள நேரடி ஈடுபாடு மற்றும் தெரிவுநிலையிலிருந்து இதனூடாக பயனடைந்து கொள்கின்றார்கள். நாட்டின் தேவைகள் குறித்த ஆழமான அறிவு, குறிப்பாக சிறிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் துணத் தேசிய மட்டத்தில் நிரந்தரப் பார்வையாளர்களுக்கு நேரடி இராஜதந்திர உறவு அல்லது இருப்பு இருக்காது. முழு அரைக்கோளத்திலும் தேசிய அலுவலகங்களுடன் அமெரிக்க மாநிலங்களின் இருப்பை அமைப்பதானது, உள்ளூர் மட்டத்தில் தமது தூதரகங்கள் மூலம் நிரந்தரப் பார்வையாளர்கள் தொடர்பு கொளவதனைள அனுமதிக்கின்றது.

அமெரிக்க மாநில தலைமையக அமைப்பின் அதிகாரிகளும், இலங்கைத் தூதரகத்தின் இராஜதந்திர உத்தியோகத்தர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டி.சி.

2022 அக்டோபர் 31

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close