ஷொப்பி - மின்வணிகம் தளம் மூலம் இலங்கை நிறுவனங்கள் இந்தோனேசிய  சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புக்களை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆராய்வு

 ஷொப்பி – மின்வணிகம் தளம் மூலம் இலங்கை நிறுவனங்கள் இந்தோனேசிய  சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புக்களை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆராய்வு

சிங்கப்பூர் அடிப்படையிலான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஷொப்பி, மின் வணிகத்தில் நிபுணத்துவம் பெற்று விளங்குவதுடன், 343 மில்லியன் மாதாந்தப் பார்வையாளர்களுடன் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மின்வணிகம் தளமாகக் கருதப்படுகின்றது. இது கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் உள்ள நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு சேவைகளை வழங்குகின்றது.

ஷொப்பி ஊடாக இலங்கை நிறுவனங்கள் இந்தோனேசிய சந்தையில் பிரவேசிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஷ் டி மெல், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சந்தை அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் அனோமா பிரேமதிலக மற்றும் ஷொப்பியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் ஒரு சந்திப்பை ஜகார்த்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் 2022 நவம்பர் 11ஆந் திகதி ஏற்பாடு செய்தது.

இந்தோனேஷியா, 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் மொத்த அபிவிருத்தித் தயாரிப்புடன்,  270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மற்றும் 180 மில்லியனுக்கும் அதிகமான நடுத்தர வர்க்கம் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் உலகின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் உள்ளது. சமீபத்திய கட்டுரைகளின்படி, இந்தோனேஷியா எதிர்காலத்தில் உலகின் முதல் 10 பொருளாதாரங்களில் இடம்பிடிக்கும். 171 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்களுடன், இந்தோனேசியா உலகளவில் மிகப்பெரிய இணையவழிச் சந்தைகளில் ஒன்றாகும். இந்தோனேசியாவில் இணையவழி ஷொப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை 2017 இல் 20 மில்லியனிலிருந்து 2022 க்குள் 65 மில்லியனாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2022 நவம்பர் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close