வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்களாதேஷில் உள்ள இலங்கை வர்த்தக சமூகத்துடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்களாதேஷில் உள்ள இலங்கை வர்த்தக சமூகத்துடன் சந்திப்பு

இலங்கையின் உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நவம்பர் 24ஆந் திகதி நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்களாதேஷில் உள்ள இலங்கை வர்த்தக சமூகம் மற்றும் பங்களாதேஷ் வர்த்தக நிபுணர்களை சந்தித்தார்.

இந்தக் குறுகிய ஊடாடும் அமர்வில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு முதலீடு, சுற்றுலா மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன உறுப்பினர்கள், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் எதிர்கால இருதரப்பு வர்த்தக முயற்சிகள் குறித்து அமைச்சர் சப்ரிக்கு விளக்கமளித்தனர்.

தற்போதைய நிலவரப்படி, பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்டுள்ள இலங்கையின் முதலீடுகள் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதுடன், இது மூன்றாவது மிக உயர்ந்த வெளிநாட்டு முதலீட்டு முயற்சியாகும். அத்துடன், இலங்கை பங்களாதேஷின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாகும். பங்களாதேஷில் சுமார் 80 புகழ்பெற்ற இலங்கை வர்த்தக முயற்சிகள் இயங்கி வருகின்றன. பல ஆண்டுகளாக, திறமையான இலங்கை வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்களாதேஷ் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பங்களித்துள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் இராஜதந்திர உறவுகளின் 50 வருடங்களை இந்த வருடம் நினைவுகூருகின்றது.

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

2022 நவம்பர் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close