இலங்கையில் 400 மெகா வோட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டங்களுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடுசெய்ய சீன தேசிய எரிசக்திப் பொறியியல் மற்றும் கட்டுமான கம்பனி லிமிட்டெட் (CNEE) முன்வந்துள்ளது. இச்செயற்றிட்டத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் அனுபவ அறிவுகள் ‘கே.இ எலெக்ரிக்’ இனால் வழங்கப்படும்.
ஷிஜியாஸுவாங்கில் உள்ள, மின்சாரத்தை உருவாக்குவதற்கும் விநியோகிப்பதற்கும் தேவையான பலவகையான உபகரணங்களை உற்பத்திசெய்யும் பாரிய ‘கே.இ எலெக்ரிக்’ தொழிற்சாலைக்கு சீனத் தூதுவர் கலாநிதி கோஹன விஜயம் செய்தார். தூதுவரை வரவேற்ற ‘கே.இ எலெக்ரிக்’ இன் தலைவர் திரு செங்க்சுவோ ஸாங் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர், அத்தொழிற்சாலையை முழுமையாகச் சுற்றிக்காண்பித்தனர். இங்கு, சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உருவாக்கவும் விநியோகிக்கவும் தேவையான உபகரணமானது குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது.
2030 ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க மூலவளங்களிலிருந்து இலங்கைக்குத் தேவையான 70 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ள அரசாங்கத்தின் கொள்கை பற்றி, கலாநிதி கோஹன விளக்கியதுடன், இந்நோக்கத்திற்கென அரசாங்கத்தால் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். அரசாங்கம் முதலீட்டாளர்களை எதிர்பார்த்துள்ளதாகவும், எந்தவொரு செயற்றிட்டங்களுக்குமான நிதிகளுக்கு கடன்கள் பெறப்படாதெனவும் அவர் வலியுறுத்தினார். இதற்குச் சாத்தியமான இடங்கள் குறித்து ‘கே.இ எலெக்ரிக்’ உடன் இணைந்து, ஏற்கனவே சில ஆரம்ப வேலைகளைச் செய்த CNEE, அதன் முன்மொழிவுகளை வைப்பதற்கான நடைமுறைகளைச் செய்துவருகிறது.
அதைத் தொடர்ந்து, ஷிஜியாஸுவாங்கில் உள்ள பின்ஷான் மாகாணத்தின் பீஷூவாங்கிலுள்ள ஹொங்ஜி பி.வி தொழிற்சாலை செயற்றிட்டம் மற்றும் சூரிய சக்தி விளக்க செயற்றிட்டம் போன்ற மிகவும் ஈர்க்கக்கூடிய சூரிய சக்தி நிறுவுகை இலங்கைக்குழுவிற்கு சுற்றிக்காண்பிக்கப்பட்டது.
வரண்ட மலைப்பகுதிகள் சூரிய சக்தி சட்டங்களால் மூடப்பட்டிருந்தன. கட்டுப்பாட்டு உபகரணம், மின்மாறு திசையாக்கிகள், அனுப்பீட்டுப் பிணைப்புகள் போன்றவற்றை ‘கே.இ எலெக்ரிக்’ உற்பத்தி செய்வது தெளிவாயிற்று. இச்செயற்றிட்டத்திலிருந்து பெறப்படும் 25 வீதமான வருமானம் நேரடியாக கிராமிய மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பிற்கு ஒதுக்கப்படுகிறதென்பது சுவாரசியமான விடயமாகும். ஜப்பானுடனான சீனப்போரின்போது பேரழிவைக் கண்டிருந்த அருகிலிருந்த கிராமம் ஒன்று, இப்போது இந்த புதுமையான வருமானம் பெறும் திட்டம் மூலமாக செழிப்படைந்துள்ளதைக் காணக்கூடியதாகவிருந்தது.
முன்மொழியப்பட்ட CNEE செயற்றிட்டமானது, அரச - தனியார் பங்குடைமை (Build-Own-Operate9) அல்லது அரச – தனியார் பங்குடைமை மற்றும் மாற்றுதல் (Build-Own-Operate and Transfer) அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தூதரகம்
பெய்ஜீங்
20 அக்டோபர் 2021