வியட்நாமிலுள்ள வெளிநாட்டுப் பயண முகவர்களுக்கான இலங்கையின் எதிர்கால சுற்றுலா வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு அமர்வு

வியட்நாமிலுள்ள வெளிநாட்டுப் பயண முகவர்களுக்கான இலங்கையின் எதிர்கால சுற்றுலா வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு அமர்வு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் வியட்நாம் பயண முகவர்கள் சங்கம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து இலங்கையின் எதிர்கால சுற்றுலா வாய்ப்புக்களை வியட்நாமில் உள்ள வெளிநாட்டுப் பயண முகவர்களுக்கு ஊக்குவிப்பதற்கான மெய்நிகர் விழிப்புணர்வு அமர்வொன்றை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 செப்டம்பர் 21ஆந் திகதி ஏற்பாடு செய்தது. இலங்கை இன்னும் வியட்நாமியர்களிடையே நன்கு அறியப்பட்ட பயண இடமாக இல்லை ஆதலால், வியட்நாம் பயண முகவர்கள் இலங்கையின் சுற்றுலா வாய்ப்புக்கள் குறித்து அறிந்து கொள்வதே  இந்த அமர்வை நடாத்தியதன் முக்கிய நோக்கமாகும். இந்த நிகழ்வில் வியட்நாமில் எழுபதுக்கும் மேற்பட்ட (70) வெளிநாட்டுப் பயண முகவர்கள் கலந்து கொண்டனர்.

தனது தொடக்க உரையில், வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் திரு. பிரசன்ன கமகே, இந்த சரியான நேரத்தில்  விழிப்புணர்வு அமர்வில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் அமைப்பாளர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், வியட்நாமில் பௌத்த கலாச்சார மற்றும் ஆரோக்கியமான சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதில் மகத்தான ஆற்றலை வலியுறுத்தினார். தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய இடமாக, இலங்கையின் சுற்றுலாத் துறையை வியட்நாமுடன் முன்னேற்றும் பாதையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி. மதுபானி பெரேயா கவனம் செலுத்தினார். திருமதி. பெரேரா வியட்நாமில் பல்வேறு பயணக் கண்காட்சிகளில் கணிசமான விளம்பர நடவடிக்கைகள் மற்றும் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்) திரு. துஷான் விக்கிரமசூரிய 'இலங்கையின் இலக்கு' பற்றிய விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார்.

வியட்நாம் பயண முகவர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்து, பிரதித் தலைவர் திரு. புங் குவாங் தாங் வியட்நாம் பயண முகவர்களுக்கான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இலங்கையில் உள்ள பரந்த அளவிலான சுற்றுலா அம்சங்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து வியட்நாமிய  முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் தூதரகத்திற்கு திரு. தங் பாராட்டுக்களைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையின் உறவுகளை மேம்படுத்துவதற்காக, வியட்நாம் பயண முகவர்களின் வருடாந்த சுற்றுப்பயணங்கள், மக்கள் தொடர்புகளை உருவாக்குவதற்காக இரு நாடுகளின் பயண முகவர்களை இணைத்தல் போன்றவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

இலங்கையின் உள்வரும் சுற்றுப்பயண இயக்குனர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் திரு. நிஷாத் விஜேதுங்க, இலங்கை சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் திரு. சனத் உக்வத்த மற்றும் இலங்கையின் சுற்றுலாத்துறையில்  சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் திரு. அனுர அபேவிக்ரம ஆகியோரது பயனுள்ள நுண்ணறிவு, வர்த்தகத்திலான அனுபவங்கள் மற்றும் கேள்வி பதில் அமர்வும் இடம்பெற்றது. வியட்நாம் பயண முகவர் சங்கத்தின் பிரதித் தலைவர் திருமதி. ஜியாங் பீன் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் கனிஷ்ட முகாமையாளர் திருமதி. ஷிராணி ஹேரத் நன்றிகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வை வியட்நாமின் ஹ நோயில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வர்த்தக செயலாளர் திருமதி. பிரசாதி பூமாவலகே நிர்வகித்தார்.

இலங்கைத் தூதரகம்

ஹ நோய்

2021 செப்டம்பர் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close