மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் லக்ஷ்மி பூஜை மற்றும் தீபாவளி கொண்டாட்டம்

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் லக்ஷ்மி பூஜை மற்றும் தீபாவளி கொண்டாட்டம்

2022 அக்டோபர் 21ஆந் திகதி தீபாவளி கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தால் சான்சரி வளாகத்தில் லக்ஷ்மி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மும்பையில் உள்ள தூதரகத் தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், மகாராஷ்டிர மாநில அரச அதிகாரிகள், உயர்மட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள், கலாச்சார மற்றும் மத நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுலா நடத்துனவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய இந்து மத பழக்கவழக்கங்களின்படி லக்ஷ்மி தேவிக்கு காணிக்கைகள் செலுத்தி பிரார்த்தனை செய்து இந்து பண்டிதர் ஒருவரால் பூஜை நடாத்தப்பட்டது. பார்வையாளர்கள் பாரம்பரிய அலங்காரங்கள் மற்றும் பூஜையைப் பாராட்டியதுடன், இலங்கையின் கலாச்சார மற்றும் மத நல்லிணக்கத்தையும் அங்கீகரித்துள்ளனர்.

பூஜையைத் தொடர்ந்து இலங்கையின் பாரம்பரிய உணவுகள், பானங்கள் மற்றும்  இனிப்புப் பொருட்களான கொத்து, அப்பம், இடியப்பம், புளித்த தேநீர், கொக்கிஸ் மற்றும் தொதல் ஆகியவை பரிமாறப்பட்டன. சமீபத்தில் மும்பையில் தொடங்கப்பட்ட 'ஸ்பைசி மெங்கோ' என்ற இலங்கை உணவகம் இந்த நிகழ்ச்சிக்கு உணவளித்தது.

இந்த நிகழ்வை இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் ஒளிபரப்பின.

இலங்கையின் துணைத் தூதரகம்,

மும்பை

2022 அக்டோபர் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close