மிலானிலுள்ள இலங்கையர்களுக்கு தொடர்ச்சியான கொன்சியூலர் சேவைகளை வழங்குதல்

மிலானிலுள்ள இலங்கையர்களுக்கு தொடர்ச்சியான கொன்சியூலர் சேவைகளை வழங்குதல்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து கவனத்தில் கொண்டு, இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கைப் பொதுமக்களுக்காக மிலானில் உள்ள இலங்கையின் உதவித் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோயைத் தணிக்கும் வகையில், தேவையான சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி, ரோம் மற்றும் மிலானுக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளும் நடாத்தப்படும்.

தற்போது நிலவும் கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளிலும் கூட, இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கி வருகின்றன.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 

2021 பெப்ரவரி 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close