மாறுவதற்கான நிகழ்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் குறிப்புக்களை வழங்கினார் - 2020 டிசம்பர் 08

மாறுவதற்கான நிகழ்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் குறிப்புக்களை வழங்கினார் – 2020 டிசம்பர் 08

 சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் அழைப்பின் பேரில், இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கி, பூகோளத் தொழினுட்ப புத்தாக்கக் கிராமம் மற்றும் சிங்கப்பூர் பொலிடெக்னிக் ஆகியவற்றின் கூட்டுப் பங்காளர் என்ற வகையில் ஜி.பி.சி.டி.எல். இனால் (ஜி.பி. சமூக அபிவிருத்தி நிறுவனம்) கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட, 'எல்லை கடந்த தொடக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கு மாறுவதற்கான' நிகழ்வில், முன்-பதிவு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய அவர்கள் 2020 டிசம்பர் 08 ஆந் திகதி வழங்கினார்.

1950 இல் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக அபிவிருத்தியடைந்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை இராஜாங்க அமைச்சர் தனது கருத்துக்களில் மீண்டும் வலியுறுத்தினார். வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வி உறவுகளை விரிவாக்குவதன் முக்கியத்துவத்தை மேலும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நல்லெண்ணம் அடுத்த ஆண்டுகளில் மேலும் விரிவடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் போது, இலங்கை சுகாதாரத் துறைக்கு வழங்கிய உதவிகளுக்காக, சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2020 டிசம்பர் 09

..............................................................

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவதாரக்க பாலசூரிய அவர்களின் உரை-2020 டிசம்பர் 08

மேன்மை தங்கியவர்களே,

மரியாதைக்குரிய அதிதிகளே,

கனவான்களே மற்றும் கனவாட்டிளே,

ஆயுபோவன்!

ஆரம்பத்தில், இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நடைபெறும், எல்லை கடந்த தொடக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கு மாறுவதற்கான இந்த நிகழ்விற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த முக்கியமான நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியாது எனினும், பதிவுசெய்யப்பட்ட இந்த வாழ்த்துச் செய்தியின் மூலமாக, நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு தரப்பினரதும் கூட்டான முயற்சியால், காலத்தின் சோதனையையும், உலக அரசியலின் மாறிவரும் இயக்கவியலையும் இலங்கை - சிங்கப்பூர் உறவுகள் தாங்கி நிற்கின்றன. எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்டப் பரிமாற்றங்களும் ஒத்துழைப்பும் அடிக்கடி இடம்பெறுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். கலாச்சாரம், கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்ற பரந்த துறைகளிலான நெருக்கமான ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இது வழிவகுத்தது.

எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பும் ஒத்துழைப்பும் அடுத்த ஆண்டுகளில் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து ஆழமடையும் என நான் நம்புகின்றேன். கோவிட்-19 பரிசோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் கோவிட்-19 க்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசுசாங்கம் அளித்த மதிப்புமிக்க உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். இலங்கை - சிங்கப்பூர் உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்ய விரும்புவதுடன், எமது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக தனிப்பட்ட முறையில் பங்களிப்புக்களை நல்குவதற்கு எதிர்பார்க்கின்றேன் எனக் கூறி எனது கருத்துக்களை நிறைவு செய்கின்றேன்.

நன்றி

The full video can be viewed at  : https://youtu.be/mG_50umdPsA

Please follow and like us:

Close